மேலும் அறிய

Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!

மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக்‌ கல்வி அலுவலர்களிடமிருந்து வேறு நபர்களைக்‌ கொண்டு கற்பித்தல்‌ பணியில்‌ ஈடுபட்ட ஆசிரியர்கள்‌ குறித்த விவர அறிக்கை எதும்‌ பெறப்படவில்லை.

பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்களைக்‌ கொண்டு பாடம்‌ நடத்துவதாக சமூக ஊடகங்களில்‌ வெளிவந்துள்ள செய்தி முற்றிலும்‌ உண்மைக்குப்‌ புறம்பானது என்று பள்ளிக்‌ கல்வித்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து பள்ளிக்‌ கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’ 7.11.2024 நாளிட்ட செய்தித்தாளில்‌ வெளிவந்துள்ள செய்திக்‌ குறிப்பில்‌ தெரிவித்துள்ளபடி, தருமபுரி மாவட்டம்‌, அரூர்‌ கல்வி மாவட்டம்‌, காரிமங்கலம் ஒன்றியம்‌ இராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌ பட்டதாரி ஆசிரியராகப்‌ பணிபுரிந்த பாலாஜி என்பார்‌, தனக்கு பதிலாக வேறொரு நபரைக்‌ கொண்டு வகுப்பறையில்‌ பாடம்‌ நடத்தியதால்‌ தற்காலிக பணி நீக்கம்‌ செய்யப்பட்டார்‌.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்‌ மீது ஒழுங்கு நடவடிக்கை

பள்ளியில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வி நலன்‌ பாதிக்கப்படுவதைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு; ஆசிரியர்கள்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ பணிகளை மேற்கொள்ளாமல்‌ வெளி நபரைக்‌ கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல்‌ பணி நடத்துவது குறித்து, பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளிப்‌ பார்வையின்போது ஏதேனும்‌ கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்த புகார்கள்‌ ஏதேனும்‌ பெறப்பட்டாலோ கண்டிப்பாக அப்புகார்‌ மீது தனிக்கவனம்‌ செலுத்தி மாவட்டக்‌ கல்வி அலுவலரே (தொடக்கக்‌ கல்வி), விசாரணை மேற்கொண்டு, அவ்விசாரணையில்‌ உண்மையிருப்பின்‌ சம்பந்தப்பட்ட ஆசிரியர்‌ மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்கப்பட வேண்டும்‌.

பள்ளிகளில்‌ இதுபோன்ற நிகழ்வுகள்‌ ஏற்படும்போது அத்தகவலை மாவட்டக்‌ கல்வி அலுவலருக்கு அளிக்கத்‌ தவறும்‌ பட்சத்தில்‌, தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ ஆகியோர்‌ மீதும்‌ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்பட்டது.

அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களிடமும்‌ அறிக்கை 

இந்நிலையில்‌ தொடக்கக்‌ கல்வி அலகில்‌ தகுதியுள்ள காலிப்பணியிடத்தில்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ மூலம்‌ நியமனம்‌ பெற்ற 6053 எண்ணிக்கையில்‌ உள்ள தற்காலிக ஆசிரியர்கள்‌ தவிர, வேறு ஏதேனும்‌ நபர்கள்‌ பணிபுரிந்து வருகிறார்களா என அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களிடமும்‌ அறிக்கை கோரப்பட்டது.

இவ்வியக்ககச்‌ செயல்முறைகள்‌ அனுப்பப்பட்ட நிலையில்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக்‌ கல்வி அலுவலர்களிடமிருந்து வேறு நபர்களைக்‌ கொண்டு கற்பித்தல்‌ பணியில்‌ ஈடுபட்ட ஆசிரியர்கள்‌ குறித்த விவர அறிக்கை எதும்‌ பெறப்படவில்லை.

ஆகையால்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்களிடமிருந்து எவ்வித அறிக்கையும்‌ பெறப்படாத நிலையில்‌, சமூக ஊடகங்களில்‌ வரப்‌ பெற்ற செய்தி முற்றிலும்‌ உண்மைக்கு மாறான செய்தியாகும்‌. அந்த செய்திக்‌ குறிப்பில்‌ குறிப்பிட்டவாறு 10,000 போலி ஆசிரியர்களைக்‌ கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல்‌ பணிகள்‌ நடைபெறவில்லை’’.

 இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
Embed widget