TNPSC குரூப் II/IIA தேர்வு: திருநெல்வேலியில் இலவச பயிற்சி வகுப்புகள்! உடனே விண்ணப்பிங்க!
645 பணிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி தேர்விற்கான அறிவிக்கை 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆண்டுதோறும் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. TNPSC 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையின்படி இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை 2, தனிப்பிரிவு உதவியாளர் வனவர் உள்ளிட்ட 645 பணிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி தேர்விற்கான அறிவிக்கை 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது.
இந்த குரூப் II/IIA தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு Smart Board வசதியுடன் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் TNPSC, TNUSRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன.
மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் study hall வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் பாடகுறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in/என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் போட்டித்தேர்வுகள் குறித்து தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel இல் இணையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள 17C, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் C காலனியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு Passport Size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் செல்ல வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0462-2902248 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




















