Crime : பள்ளி வளாகத்தில் கறி விருந்து; மது பார்ட்டி நடத்திய ஆசிரியர்.. நடந்தது என்ன? நடவடிக்கை என்ன?
பள்ளி வளாகத்தில் சகாக்களுடன் கறி விருந்து, சாராய பார்ட்டி நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி வளாகத்தில் சகாக்களுடன் கறி விருந்து, சாராய பார்ட்டி நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி உள்ளது. அங்கே ஆசிரியர் ஒருவர் தனது நண்பர்களுக்கு கறி விருந்தும், மது விருந்தும் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பள்ளி வளாகத்தின் வெளியே நின்று வீடியோ எடுத்தவர்கள் சிலருடன் அந்த ஆசிரியர் போதையில் தகராறு செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த விருந்து நடந்தது என்று என்பது போல் விளக்கம் ஏதுமில்லை.
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அசோக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், பள்ளி வளாகத்தில் கறி, மது விருந்து நடத்திய வீடியோ சமூக வலைதளங்கள் நேற்று (நவ 1) வெளியானது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்துவிட்டோம். அந்த ஆசிரியரின் நடத்தை பணி விதிகளுக்கு புறம்பானது என்றார். பிச்சோர் பகுதி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டும், வட்டார கல்வி அலுவலரும் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் பள்ளியில் இதுபோன்று அடிக்கடி பார்ட்டிகளை நடத்துவது வழக்கம் என்று கிராமவாசிகள் பலரும் கூறியுள்ள நிலையில் அவருக்கு பிடி இறுகுகிறது.