மேலும் அறிய
Advertisement
திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின் போது பல இடங்களில் கொள்ளை - 24 வயது பெண்ணிடம் போலீஸ் விசாரணை
அந்தப் பெண் தனது சொந்த ஊரை தெரிவிக்காமல் பல மாவட்டங்களின் பெயர்களை தெரிவித்து காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வணிகவரித் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இந்த தேரோட்ட திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை பார்ப்பதற்காக திருவாரூருக்கு வருகை தந்திருந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக தேரோட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் திருவாரூர்,தஞ்சாவூர் நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 1,500 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் தேர் வலம் வரும் நான்கு வீதிகளிலும் 120 தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் காவல் துறையினரின் கண்காணிப்பையும் மீறி தேரோட்டத்தை காண வந்த பக்தர்களிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 ஆயிரம் ரொக்கம் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக திருவாரூர் நகர காவல் துறையினரிடம் பாதிக்கப்பட்ட ஒரு சில நபர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் நகர காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பெண் தனது சொந்த ஊரை தெரிவிக்காமல் பல மாவட்டங்களின் பெயர்களை தெரிவித்து காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் இவருடன் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு நபர்கள் யார் யார் என காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அது மட்டுமின்றி நேற்று தேரோட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களிடம் இருந்து மேலும் பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.அதே நேரத்தில் அவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களின் உடைமைகளையும் திருட்டுப் போன பொருள்களையும் கண்டுபிடித்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion