மது கொடுத்து 23 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் அரங்கேற்றிய கொடூரம்!
23 வயது பெண் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சற்று அதிகமாக பதிவாகி வருகின்றன. டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்தும் இந்த வகையான குற்றங்கள் குறையவில்லை. இந்தச் சூழலில் தற்போது மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது.
குருகிராம் பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராஜஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய தோழியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவருடைய தோழியின் ஆண் நண்பர் ஒருவர் இந்தப் பெண்ணிற்கு மதுவை கலந்து கொடுத்துள்ளார். அந்த மதுபானத்தை குடித்த பிறகு அப்பெண் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை அவர் மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் டவுசா என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து அவர்கள் நான்கு பேரும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணை காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் தோழியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணிற்கு காவல்துறையினர் மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளனர். அதன்பின்னர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். எனினும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த விவாகரம் குறித்து காவல்துறையினர் தரப்பில் எஸ்பி அனில் பெனிவால்,”பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகார் தொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். அந்தப் பெண்ணை அவர்கள் கடத்தவில்லை. ஆனால் அவர் குடித்த குளிர்பானத்தில் மதுவை கழந்து கொடுத்துள்ளனர். அந்தப் பெண்ணின் தோழியிடத்திலும் விசாரணை நடத்த ஜெய்ப்பூருக்கு ஒரு படையை அனுப்பியுள்ளோம். விரைவில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவாகரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியை பெற்று தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். எனவே இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க: குளித்துவிட்டு டவல் கேட்ட கணவன்... தாமதமாக வந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!