மேலும் அறிய

பாளையங்கோட்டை அருகே 2 வீடுகளில் தங்க நகை கொள்ளை - சிசிடிவியில் பதிவான டிப்டாப் இளைஞர்

ஒரே நேரத்தில் இரண்டு வீட்டிலும் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை அருகே கே.டி.சி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது29). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி பார்த்தசாரதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் உடன்குடி செட்டியாபத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்தசாரதிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேற்றிரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் நாஞ்சில் பிரித்விராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரம் நகரில் வசிக்கும் கோகுல்நாத்(31) என்பவரது வீட்டிலும் 2 சவரன் தங்கநகை திருடு போயிருப்பது தெரியவந்தது. கோகுல்நாத் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவரும் சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் நேற்றிரவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரண்டு புகாரின் பேரில் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக ஒரே நேரத்தில் இரண்டு வீட்டிலும் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். அதன்படி அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவி கேமராவில் டிப்டாப்பாக உடை அணிந்த இளைஞர் ஒருவர் கையில் இரும்பு கம்பி போன்ற ஆயுதத்துடன் அங்கும் இங்குமாக நடந்து சென்றது பதிவாகியிருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் அந்த காட்சிகள்  அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கே டி சி நகர் அருகே இரண்டு வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
CP Radhakrishnan : ’துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரக் தமிழர்’ ஆதரவு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்..?
’துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தமிழர்’ ஆதரவு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்..?
Asia Cup Squad 2025: குழப்பத்தில் இந்திய அணி - சின்னாபின்னமாகிறதா பிளேயிங் லெவன்? கம்பீர் செய்வது என்ன?
Asia Cup Squad 2025: குழப்பத்தில் இந்திய அணி - சின்னாபின்னமாகிறதா பிளேயிங் லெவன்? கம்பீர் செய்வது என்ன?
Top 5 Bikes: ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரையிலான பைக்குகள் - பவர் பெர்ஃபார்மன்ஸ், அதுக்குன்னு கார் ரேஞ்சிலா?
Top 5 Bikes: ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரையிலான பைக்குகள் - பவர் பெர்ஃபார்மன்ஸ், அதுக்குன்னு கார் ரேஞ்சிலா?
Embed widget