மேலும் அறிய

1 பவுன் வச்சு பூஜை செய்தா 2 மடங்கா நகை கொட்டும்... பூசாரியின் போக்கிரித்தனம்... ஏமாந்த குடும்ப பெண்கள்!

சென்னையை அடுத்த கொளத்தூர் அருகே போலி சாமியாரிடம் நகையை பறிகொடுத்து ஏமாந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தெருக்கு தெரு மரம் இருப்பதுபோல் சாமியார் நாளுக்கு நாள் முளைத்து கொண்டு இருக்கிறார்கள். நித்தியானந்தா, அண்ணபூரணி என நான் தான் அடுத்த கடவுள் என பலரையும் தங்களது பேச்சால் ஈர்த்து கவர்ந்து கொண்டனர். 

இவர்களுக்கென தனி நாடே உருவாகும் அளவிற்கு செல்வாக்கு உயர்ந்து கடவுளாகவே பார்க்கப்படுகிறார்கள். தனி பக்தர் பட்டாளம், தனி நாடு, நாணயம் என இவர்கள் காட்டில் மழைதான். என்னதான் இவர்கள் மீது ஒரு தரப்பினர் கொண்டாடி தீர்த்தாலும், மற்றொரு தரப்பினர் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்துதான் வருகின்றனர். 

பலரும் இவர்கள் போன்றோர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கி வந்தாலும், இது போன்ற சாமியார்கள் இன்னும் சுதந்திர பறவையாக பறக்கின்றனர். இவர்களை பின்பற்றி இன்னும் பல பேர் உருவெடுத்து வருகின்றனர். 

அந்த வரிசையில், கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரிதா, கோகிலா, ரதி, அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. நண்பர்களான இவர்கள் வீட்டிற்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் வட பழனியைச் சேர்ந்த கோயில் பூசாரி ஒருவர் பூரண பிரகாஷ் என்பவர் சென்று, 'வீட்டில் உள்ள நகைகளை சொர்ண அபிஷேகம் செய்து, 48 நாட்கள் பூஜை செய்தால், உங்களிடம் அதிகமாக தங்கம் சேரும்,' என கூறியுள்ளார்.

மேலும் படிக்க : SBI Whatsapp Service: வாட்ஸ் ஆப் மூலம் வங்கிசேவை.. களத்தில் குதிக்கும் எஸ்.பி.ஐ வங்கி.. முழுவிவரம் உள்ளே..!

இதனை நம்பி சரிதா அரை சவரன் தங்கமும், சரஸ்வதி 2 சவரன் தங்கமும், கோகிலா 3.5 சவரன் தங்கமும், ரதி 1 சவரன் தங்கமும் என 7 சவரன் தங்க நகைகளை பூர்ண பிரகாஷிடம் கொடுத்துள்ளனர். பின்னர், 48 நாட்கள் கழித்து நகையை கொடுத்தவர்கள் அவரிடம் திருப்பி கேட்டபோது, ஏதாவது ஒரு காரணம் சொல்லி காலத்தை கடத்தி வந்துள்ளார். 

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மேற்கண்ட 4 பேரும், நேற்று ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் சொர்ண அபிஷேகம் செய்து நகைகளை திருப்பி தருவதாக கூறி எங்களது 4 பேரிடமும் நகை களை வாங்கி ஏமாற்றிய பூரண பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், பூரண பிரகாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புLoan Agent Harassment | ’’ரோட்டுல தள்ளி அடிச்சாங்க குழந்தை ABORTION ஆகிடுச்சு’’ கலங்கி நிற்கும் தாய் | VPMNamakkal Collector : ’’பாதையை அடைச்சா அவ்ளோதான்’’அதிகாரிகளை அலறவிட்ட கலெக்டர்..காலில் விழுந்த மக்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.