இன்று(பிப்ரவரி 1) காலை, 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதில் புதிய வருமான வரி மசோதா தான் மிகவும் முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்பட்டது. ரூ.12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாத ஊதியம் ரூ.1 லட்சம் பெறுபவர்கள் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை.
கிராமப்புரங்களில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மற்றும் கல்வி நிலையங்களுக்கு இலவச இணைய சேவை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.இ.டி பேனர்களுக்கான சுங்க வரி 20% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரிக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும்.
இன்சூரன்ஸில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு 100% அனுமதி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பெரும் கடனுக்கான வட்டி மானியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.
சிறு, குறு தொழில்துறையினருக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Swiggy, Zomato போன்ற டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்றும், அவர்களுக்காக தனி இணையதளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்கபடும் என்றும் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.