Best Safety Rating Cars: மிகவும் பாதுகாப்பான கார்கள் - ரூ.10 லட்சத்தில் இத்தனை உயிர்காக்கும் அம்சங்களா?
Best Safety Rating Cars Under 10 Lakhs: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Safest Cars Under 10 Lakhs: 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்கள் தொடர்பான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்கள்:
கார் என்பது பணக்காரர்களுக்கானது என்பதை தாண்டி, தற்போது அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பயனாளர்களின் முதல் ஆப்ஷன் என்பது 10 லட்ச ரூபாய் என்ற பட்ஜெட்டிற்குள் தான் இருக்கிறது. அதிலும், தங்களது பட்ஜெட்டில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் திகழும் கார் தான் பயனாளர்களின் முதன்மையானதாக உள்ளது. அந்த வகையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் பாதுகாப்பு அம்சங்களில் சிறந்து விளங்கும் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Mahindra XUV300:
டாடா நெக்ஸான் நாட்டின் மிகவும் பாதுகாப்பான கார் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் மஹிந்திரா XUV300 தான், பாதுகாப்பு குறியீட்டில் 5-ஸ்டார் குளோபல் NCAP மதிப்பீட்டைப் பெற்ற நாட்டின் முதல் மாடலாகும். டாடா நெக்ஸானைப் போலல்லாமல் 3-ஸ்டார் குழந்தை பாதுகாப்பு மதிப்பெண்ணை பெற்றுள்ள நிலையில் XUV300 4-ஸ்டாரை பெற்றுள்ளது. 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், சீட் பெல்ட் நினைவூட்டல், பேனிக் பிரேக்கிங் சிக்னல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் 7 ஏர் பேக்குகள் உள்ளன. இந்த மாடலின் தொடக்க விலை ரூ.8.41 லட்சமாகும்.
Tata Punch:
முழு 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற டாடா மோட்டார்ஸின் சமீபத்திய மாடல் டாடா பன்ச் ஆகும். இந்த SUV-ஸ்டைல் ஹேட்ச்பேக் மாடலானது வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 5-ஸ்டாரையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டாரையும் பெற்றுள்ளது. டியூயல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், ஈபிடி, ரிவர்ஸ் பிரேக்கிங் கேமரா, ஆட்டோ முகப்பு விளக்குகள், ரெயின் சென்சிங் வைபர்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை 6 லட்ச ரூபாய் ஆகும்.
Tata Altroz:
Tata Altroz இந்தியாவில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நாட்டில் விற்பனையில் உள்ள பாதுகாப்பான ஹேட்ச்பேக் ஆகும். இது வயது வந்தோருக்கான பாதுகாப்பு பிரிவில் 5-ஸ்டாரையும், குழந்தைகளுக்கான பாதுகப்பான பிரிவில் 3-ஸ்டாரையும் பெற்றுள்ளது. இதில் டியூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், கார்னர் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், வாய்ஸ் அலெர்ட்ச், பார்க்கிங் அசிஸ்டன்ட்ஸ், உயரத்த அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன் தொடக்க விலை ரூ.6.25 லட்சமாகும்.
Tata Nexon:
டாடா நெக்ஸான் 'இந்தியாவில் பாதுகாப்பான கார்' என்ற விளம்பரத்தின் மூலம் மிகவும் பிரபலமானது. வயது வந்தோருக்கான பாதுகாப்பு பிரிவில் 5 ஸ்டாரையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பான பிரிவில் 3 ஸ்டாரையும் கொண்டுள்ளது. இதில் டியூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்ஸ், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்டன்ட், ஹ்ல் ஹோல்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.7.7 லட்சமாகும்.
Honda Jazz:
சில ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பகுதிகளில் ஹோண்டா ஜாஸ் மேம்படுத்தலைப் பெற்றாலும், இந்தியாவில் கடைசி ஜென் மாடல் தான் தற்போது வரை விற்பனை செய்து வருகிறது. வயது வந்தோருக்கான பாதுகாப்பு பிரிவில் 4 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவில் 3 ஸ்டார்களையும் கொண்டுள்ளது. இதில் சென்சார் உடனான டியூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன. இதன் தொடக்க விலை ரூ.8 லட்சமாகும்,.