மேலும் அறிய
46 வயதில் நிறைமாத கர்ப்பம்! காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி நடிகை சங்கீதாவின் பிரெக்னென்சி போட்டோஸ்!
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா, தற்போது தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சீரியல் நடிகை சங்கீதாவின் கர்ப்பகால புகைப்படங்கள்
1/8

டான்சராக வெள்ளித்திரையில் அறிமுகமாகி, பின்னர் திரையுலகில் இருந்து விலகி ஒரு தொழிலதிபராக மாறிய பின்னர் மீண்டும் சினிமாவுக்குள் காமெடி நடிகராக என்ட்ரி கொடுத்துள்ளவர் தான் ரெடின் கிங்ஸ்லி.
2/8

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சிம்புவை வைத்து இயக்கிய, வேட்டை மன்னன் படத்தில் ரெடின் கிங்ஸ்லி காமெடியனாக நடித்த நிலையில், அந்த படம் ரிலீஸ் ஆகாமல் போனது.
3/8

இதை தொடர்ந்து, நெல்சன் திலீப் குமார் நடிகை நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்து, தனித்துவமான பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்கள் மனதை கவனிக்க வைத்தார்.
4/8

பின்னர் அடுத்தடுத்து, திலீப் குமாரின் படங்களில் நடித்தது மட்டும் இன்றி, மற்ற இயக்குனர்கள் படத்திலும் நடித்து வருகிறார். அதே போல் ஒரு தொழிலதிபராகவும் வெற்றிநடை போடுகிறார்.
5/8

45 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ரெடின் கிங்ஸ்லி கடந்த 2023-ஆம் ஆண்டு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற, சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
6/8

இவர்களின் திருமணம், மிகவும் எளிமையாக நடந்தது. இதை தொடந்து கடந்த ஆண்டு சங்கீதா கர்ப்பமாக உள்ள தகவலை அறிவித்ததோடு, தான் நடித்து வந்த ஆனந்த ராகம் சீரியலில் இருந்தும் விலகினார்.
7/8

சமீபத்தில் கூட ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய மனைவி சங்கீதாவுக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார். 46 வயதில் கர்ப்பமாக இருக்கும் சங்கீதா தற்போது தன்னுடைய கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
8/8

மாடர்ன் ட்ரஸ்ஸில்... இவர் எடுத்து கொண்டுள்ள இந்த போட்டோசை அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது வைரலாகி வருகிறது.
Published at : 09 Mar 2025 09:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement