IND vs NZ: அவர் ஏலியன்தான்..மிரட்டிய க்ளென் ஃபிலிப்ஸ்; மீண்டும் சூப்பர்மேன் கேட்ச் - வைரல் வீடியோ!
ICC Champions Trophy Final IND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் க்ளென் ஃபிலிப்ஸ் பறந்து பிடித்த கேட்ச் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் க்ளேன் ஃபிலிப்ஸ் பறந்து பிடித்த கேட்ச் வீடியோ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Absolute madness form #glennphillips 🙏#INDvsNZ pic.twitter.com/9XhfAJZcKV
— mahi_tarak (@mahi_tarak733) March 9, 2025
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி மகுடம் சூடுவதற்கு நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன் எடுத்தது.
இந்தியா வெற்றி:
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இவர்களின் பார்டனர்ஷிப்பை க்ளென் ஃபிலிப்ஸ் முறியடித்தார்.
ஷுப்மன் கில் 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். க்ளென் ஃபிலிப்ஸ் ஷுப்மன் கில் அடித்த பந்தை பறந்து பிடித்தத வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
மனுசனே இல்லை.. ஏலியன்தான்!
இந்தத் தொடர் முழுவதும் க்ளென் ஃபிலிப்ஸின் கேட்ச் பேசப்பட்டு வந்தது. அப்படியிருக்கையில், இந்த முறை பறந்து பிடித்த கேட்ச், அவர் மனுசானா இல்லையே ஏலியனா? என்று பலரும் கமெண்ட் செய்தனர்.
Another day, another GP screamer! He leaps and flicks out a right hand to take a stunner at short extra cover and break the Indian opening partnership. Shubman Gill goes for 31. Watch play LIVE in NZ on @skysportnz 📺 LIVE scoring | https://t.co/QtdToriYHk 📲 #ChampionsTrophy pic.twitter.com/Yg7nXultcT
— BLACKCAPS (@BLACKCAPS) March 9, 2025
இந்த தொடரில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்திய அணி 12- ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றுள்ளது. இந்தியா 49 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து எடுத்து பெற்றது.




















