மேலும் அறிய
Rasi Palan Today, Oct 8: கும்பத்துக்கு நட்பு நிறைந்த நாள், மீனத்துக்கு வெற்றி - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, October 8: அக்டோபர் மாதம் 8ஆம் நாள் செவ்வாய்க் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

ராசிபலன்
Source : abp
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 8, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
நினைத்த சில பணிகளை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். யாரையும் குறைத்து மதிப்பிடுவதை தவிர்க்கவும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். வருமானப் பற்றாக்குறை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வாகனங்களால் திடீர் செலவுகள் உண்டாகும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். சாந்தம் வேண்டிய நாள்.
ரிஷப ராசி
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
மிதுன ராசி
பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். அரசாங்க காரியங்கள் நிறைவு பெறும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.
கடக ராசி
குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் நுட்பங்களை அறிவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
பழைய பிரச்சனைகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உறவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பழமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
கன்னி ராசி
சுபகாரிய முயற்சிகள் கைகூடும். இசை துறைகளில் முனேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.
துலாம் ராசி
எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முகப்பொலிவு மேம்படும். வரவேண்டிய வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். யோகம் நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். சில பணிகளை நீங்களே செய்து முடிப்பது நல்லது. எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பரிவு வேண்டிய நாள்.
தனுசு ராசி
நினைத்த சில பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். திடீர் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். பிரயாணம் நிறைந்த நாள்.
மகர ராசி
வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நன்மை நிறைந்த நாள்.
கும்ப ராசி
அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். சொந்த ஊர் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். மனதில் அரசு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். நட்பு நிறைந்த நாள்.
மீன ராசி
எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவல் பணிகளில் துரிதம் ஏற்படும். மனதளவில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் உண்டாகும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
கல்வி
கல்வி
Advertisement
Advertisement