மாமியார் - மருமகள் சண்டை வராமல் இருக்க பரிகாரம் இதுதான்! கட்டங்கள் சொல்லும் காரணம் என்ன?
மாமியார் - மருமகள் பிரச்சினைகள் வருவதற்கு காரணம் என்ன? என்பதையும், அதற்கான பரிகாரத்தையும் கீழே விரிவாக காணலாம்.
அன்பார்ந்த ஏபிபி நாடு வாசகர்களே, மாமியார் மருமகள் சண்டை காலம் காலமாக இருப்பதாக திரைப்படத்தில் காட்டுகிறார்கள். ஆனால், அது உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை. எத்தனையோ குடும்பங்களில் மாமியாரும் மருமகளும், தாய் மகள் போல இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தவர்களின் ஜாதகங்களில் பொதுவாக எனக்கும் என் மாமியாருக்கும் எப்படி இருக்கும் என்று பெண்கள் கேட்பது உண்டு. அதற்கான பலன்களை கூற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். ஆனால் நான் பின்வரும் கருத்துக்களை கூறுவது பொதுவாக தானே தவிர இப்படிப்பட்டவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று அவரவர் சொந்த ஜாதகத்தை வைத்து தெரிந்து கொள்ள முடியுமே தவிர நான் கூறுகின்ற விதி பொதுவான விதியே.
மாமியார் - மருமகள் உறவு:
திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் போதே கணவன் வைக்கும் கண்டிஷன்களில் ஒன்று என்னுடைய தாயை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது. அப்படித்தான் திருமணம் ஆன பிறகும் மருமகளுக்கும் மாமியாருக்கும் நல்லபடியாக கருத்து வேறுபாடு இல்லாமல் செல்ல வேண்டும் என்பது கணவர்மார்களின் கருத்தாகவே இருக்கும். ஆனால் சில வீடுகளில் நேர்மாறாக மாமியாருக்கும் மருமகளுக்கும் சிறு சண்டை போட ஆரம்பித்து பின்பாக தனிக்குடித்தனம் வரை செல்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு பெண் அவருடைய ஜாதகத்தை வைத்து அவருக்கு மாமியார் ஆகுமா? ஆகாதா என்பதாக கூற முடியுமா என்றால் ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடியும் அதைப்பற்றி பார்க்கலாம்.
ஒரு பெண் ஜாதகத்தில் சந்திரன் வலுவிழந்து காணப்பட்டால் அவரால் தாயாரையோ அல்லது மாமியாரையோ புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுமே, தவிர பிரிவு ஒன்றும் ஏற்படாது. எப்பொழுதுமே நீச்சகருங்கள் புரிந்து கொள்ள முடியாத தன்மையைத்தான் காட்டுமே தவிர, மாறாக தவறாக ஒன்றும் காட்டி விடாது. விருச்சகத்தில் சந்திரன் இருக்க பிறந்தவர்கள் எத்தனையோ பேர் மாமியாருடன் மிக மிக நெருக்கமாக ஒரு தாயைப் போல பழகுவதை நான் பார்த்திருக்கிறேன். அப்படி என்றால் அதுபோன்ற ஜாதகர்களுக்கு மாமியார் ஆகாதா? என்றால் அப்படி அல்ல. மாமியாரை குறிக்கக்கூடிய கிரகம் சந்திரன் மட்டுமே அப்படியானால் சந்திரனின் வலிமையையும் ஜாதகத்தில் பத்தாம் இடத்தின் வலிமையும் வைத்து மட்டும் தான் ஒருவருக்கு மாமியார் ஆகுமா? ஆகாதா என்பதை கூற முடியும்.
19ம் இடம் மாமியார் ஸ்தானம்:
ஜாதகத்தில் பத்தாம் இடம் மாமியார் ஸ்தானம். அது ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம் சந்திரன் வலிமையாக இருக்கிறார் ஆனால் பத்தாம் இடம் சில சமயங்களில் சூட்சமமாக வலுவிழந்து காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு மாமியார் வலிமையாக இருக்க மாட்டார். அல்லது அவரை புரிந்து கொள்ள மாட்டார். இதனால் சதா மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சில எடுத்துக்காட்டு ஜாதகங்களோடு மாமியார் மருமகனின் புரிந்து கொள்வதைப் பற்றி நாம் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு ஒரு பெண்ணுக்கு ஆறாம் வீட்டில் பத்தாம் அதிபதி அமர்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆறாம் இடம் என்பது எதிரி ஸ்தானம். நோய்களைக் கொண்டு வரக்கூடிய இடம், கடன்களை உருவாக்கக்கூடிய இடம், இப்படிப்பட்ட இடத்தில் பத்தாம் அதிபதி அமர்ந்திருந்தால் நிச்சயமாக அவருக்கு அரசு உத்தியோகமோ அல்லது மிக பிரம்மாண்டமான வேலை தொழில் அமைப்புகள் சிறப்பாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் மாமியாரோடு ஒரு சில சண்டை சச்சரவைகள் ஏற்பட்டு பின்பு ஒன்று கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு அல்லது வேலை நிமித்தமாக மாமியார், மருமகள் ஒன்றாக இல்லாமல் போகும் சூழல் கூட உருவாகலாம். இப்படியாக சில கிரக நிலைகளை வைத்து மாமியார்- மருமகள் உறவு முறையை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
சிறு, சிறு சண்டைகள்:
என்னுடைய கருத்து அனைத்தும் மருமகளும் மாமியாரை தாயாக பாவித்து அவரோடு நல்ல இணக்கமான சூழலை உருவாக்கி குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றி, அடுத்த நிலைக்கு குடும்பத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஜாதகத்தில் மாமியாருக்கு ஆகாது என்றால் அவர்கள் சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள் என்றில்லை, மாறாக சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் உருவாகலாம். ஆனால் பிரிவதற்கான வாய்ப்புகள் இல்லை.
சக்தி வழிபாடு :
ஈஸ்வரனின் மனைவியான பார்வதி அம்மையார் சக்தி ரூபத்தில் நமக்கெல்லாம் காட்சியளிக்கிறார் இதற்கு ஒரே பரிகாரம் என்று பார்த்தால் சக்தியை வணங்குவது தான். பெண்கள் அனைவருமே சக்தியின் வடிவமாக இருக்கிறார்கள் எனவே நிச்சயமாக மாமியார் மருமகள் பிரச்சினைக்கு சக்தி வழிபாடு மட்டுமே ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியும்.