Annamalai Challenge Udhayanidhi: அண்ணாசாலைக்கு தனியா வர்றேன்..முடிஞ்சா தடுத்துப் பார்..உதயநிதிக்கு அண்ணாமலை பதில் சவால்...
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, அண்ணாசாலைக்கு வருமாறு உதயநிதி சவால் விடுத்த நிலையில், அதற்கு அண்ணாமலை பதில் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் வார்த்தைப்போர் முற்றி வருகிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலையை, முடிந்தால் அண்ணாசாலைக்கு வரச் சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு தற்போது அண்ணாமலை பதில் சவால் விடுத்துள்ளார்.
அண்ணாமலைக்கு சவால் விடுத்த உதயநிதி
சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தனியார் பள்ளி நடத்துபவர்களை அண்ணாமலை விமர்சிப்பது தவறானது என்றும் அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசிடம் பேசி வாங்கித் தருமாறும் அண்ணாமலையிடம் சொல்லுங்கள் என்று கூறினார். மேலும், மக்கள் பிரச்னையை திசைதிருப்புவதற்காக அண்ணாமலை எதை எதையோ உளறிக் கொட்டுவதாகவும், அண்ணா அறிவாலயத்திற்கு வருகிறேன் என்று சொன்ன அண்ணாமலைக்கு தைரியமிருந்தால், முதலில் அண்ணாசாலைக்கு வரச் சொல்லுங்கள் என்றும் சவால் விடுத்தார்.
உதயநிதிக்கு அண்ணாமலை பதில் சவால்
இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தனி ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன், முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் வைத்து தடுத்துப் பாருங்கள் என்று கூறி பதில் சவால் விடுத்துள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் கடந்த காலங்களில் தரமில்லாமல் பேசி இருப்பதாகவும், அவ்வாறு தரமில்லாமல் பேசினால் தரமில்லாத பதில்தான் வரும் என்று கூறிய அண்ணாமலை, கல்விக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கி கொடுத்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில வழி பள்ளிகளிலேயே தமிழ் இல்லை என்றும் கூறினார்.
அதோடு, நாளை காலை 6 மணி முதல் ‘கெட் அவுட் ஸ்டாலின்‘ என்பதை இணையத்தில் ட்ரெண்டாக்க உள்ளதாகவும், திமுக ஐடி விங்கிற்கு ஒரு நாள் அவகாசம் உள்ளது, அவர்கள் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார் அண்ணாமலை.
இதையும் படியுங்கள்: Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

