மேலும் அறிய

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என சர்ச்சைகள் வெளியான நிலையில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் விளக்கம் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான மாயாவதி இன்று நேரில் வந்து, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி, அவரது உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய, குடும்பத்தினர் சார்பில் சென்னை மாநாகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், குடியிருப்பு பகுதியிலேயே உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். அவர்களது கோரிக்கை அவசர வழக்காக இன்று காலை விசாரிக்கப்பட உள்ளது. அதன் முடிவிலேயே ஆம்ஸ்ட்ராங் உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்பது உறுதியாகும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தெரிவித்தது அதிர்ச்சியளித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், “கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சிசிடிவி பதிவு அடிப்படையில், கைதானவர்கள் குற்றவாளிகள்தான் என்பதை உறுதி செய்துள்ளோம்.  பல சிசிடிவி காட்சிகளை பார்த்து உறுதிசெய்த பிறகே கைது நடவடிக்கை மேற்கொண்டோம். அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்பதற்கு ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் சமர்ப்பிக்கலாம். தற்போது சந்தேகத்தின் பேரில் மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கிற்கு பழிவாங்கும் நோக்கில் தான், ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொன்றதாக 8 பேர் போலீசில் சரண்டைந்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும்  3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சரண்டைந்த ஆற்காடு பாலு, திருமலா, மணிவண்ணன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN
Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Breaking News LIVE 5th OCT 2024: திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Breaking News LIVE 5th OCT 2024: திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Embed widget