மேலும் அறிய

Madras HC on EPS | "நீங்க பொதுச்செயலாளர் இல்ல"..நீதிமன்றம் கொடுத்த ஷாக்! அப்செட்டில் EPS!

உங்களை அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் என எடப்பாடி பழனிசாமியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு இபிஎஸ் மன்னிப்பு கோரியுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியில் பல குழப்பங்கள் நிலவருகிறது. அவரது மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலா பொதுச்செயலாளர் ஆனதுமே சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். 

அதன்பின் சசிகலா கைக்காட்டிய இபிஎஸ்சிடம் அதிமுக சென்றது. ஆனால் அதற்கு எதிராக பலமுறை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திழழ்ந்த ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி கட்சியை  மீட்க போராடி வந்தார். ஆனால் இபிஎஸ் சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு ஓபிஎஸ்சுடன் கைகோர்த்து அதிமுகவில் அதுவரை இல்லாத ஒருங்கணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கினர். 

அதுவும் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஆட்சி கையில் இருந்தவரை இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி என காட்டிக்கொண்டு செயல்பட்டனர். ஆனால் சில நாட்களிலேயே இபிஎஸ் தலைமையில் பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கினர். மேலும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என உத்தரவிடக்கோரியும் ஓபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சசிகலா தரப்பிலும் கே.சி.பழனிசாமி தரப்பிலும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் போது எடப்பாடி பழனிசாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எனக்கூறி மனுத்தாக்கல் செய்துள்ளார். 

ஆனால் தற்போது பதில் மனுத்தாக்கல் செய்தபோது அதிமுக பொதுச்செயலாளர் என மனுத்தாக்கல் செய்துள்ளார். இதைப்பார்த்த நீதிபதி நீங்கள் எப்படி பொதுச்செயலாளர் எனக்கூற முடியும். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு நிலுவையில் இருக்கும்போது உங்களை எப்படி பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். 

மேலும், மனுவை திருத்தி மீண்டும் தாக்கல் செய்யுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தனது தவறுக்காக மன்னிப்பு கோரிய இபிஎஸ் தரப்பு திருத்தப்பட்ட மனுத்தாக்கல் செய்ய உள்ளது. இதையடுத்து இதுகுறித்த வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget