TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலாட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இரண்டாவது நாளாக நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டமாக வெளியாகி வருகிறது. இன்றும்,நாளையும் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக நாளை மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் அதிக அல்லது அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நவம்பர் 26-ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தொடர்ந்து மழையானது இன்று முழுவதும் பதிவானது. இதன் காரணமாக போதிய முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
இதற்கிடையில் கனமழை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டாவது நாளாக நவம்பர் 27-ம் தேதி விடுமுறை அறிவித்து ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெளுக்கும் கனமழை
ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பெய்வாய்ப்புள்ளது.
28-11-2024:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளகுகுச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
29-11-2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-11:2024
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர். காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01-12-2024 மற்றும் 02-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, கன மிக கனமழை பெய்யக்கூடும்.