Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி , விஜய் சேதுபதி , மஞ்சு வாரியர் நடித்துள்ள விடுதலை 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

விடுதலை 2
தொடர் வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தடத்தை உருவாக்கியவர் வெற்றிமாறன. பொல்லாதவன் , ஆடுகளம் , விசாரணை, அசுரன் , வடசென்னை என மாறுபட்ட கதைக்களங்களை கையாண்டு கமர்ஷியல் வெற்றியும் கொடுத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக அறிமுகமான விடுதலை படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. காமெடியனாக அறியப்பட சூரி இப்படத்தில் தன்னை ஒரு உணர்வுப்பூர்வமான நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். விஜய் சேதுபதி இப்படத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்து முத்திரை பதித்தார். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி படமாக்கப்பட்ட விடுதலை திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அரசியல் விவாதப்பொருளாக மாறியது. அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறனின் சினிமா பயணத்தில் ஒரு மைல் கல்லாக இப்படம் கருதப்படுகிறது.
ஒரு சிறிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட இப்படம் எதிர்பார்ப்புகளை மீறி இரு பாகங்களாக விரிவானது. கடந்த ஓராண்டு காலமாக விடுதலை 2 ஆம் பாகம் படப்பிடிப்பில் இருந்து வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
விடுதலை 2 டிரைலர்
தற்போது இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. முந்தைய பாகத்தில் நடித்த சூரி , விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மஞ்சு வாரியர் , கிஷோர் , சூர்யா சேதுபதி என பல புதிய நடிகர்கள் படத்தில் இணைந்துள்ளார்கள். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். விடுதலை முதல் பாகத்தின் முன்கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

