அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அமைச்சர் காந்தி குறித்து விமர்சித்த அதிமுக கவுன்சிலரிடம், திமுக கவுன்சிலர் ஒன்று திரண்டு கடும் வாக்குவாதம். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலர்கள்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற இயல்பு கூட்டம் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, அஜந்தா வழங்கும் நடவடிக்கை முறைப்படுத்த வேண்டும், என்னவென்று தெரியாமலே கையெழுத்து போட்டுவிட்டு செல்லும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரின் தவறுதான் என்று கூறினார். மாமன்ற கூட்டத்தின் அஜந்தாவை முன்னதாகவே கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுத்தால் முறையாக படித்துவிட்டு சரியான கேள்வி எழுப்ப முடியும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். மாமன்றத்தின் அஜந்தாவை படிப்பதற்கு நேரம் இல்லாத நிலையில் கையெழுத்திட்டதால் மக்கள் மீது வரியை சுமையை உயர்த்தி விட்டதாக திமுக கவுன்சிலர் கதறுவதாக அதிமுக கவுன்சிலர் தெரிவித்தார். நீங்கள் ஆரம்பித்துவிட்டு, திமுக கவுன்சிலரை சொல்வது தவறு என்று மற்ற மாமன்ற உறுப்பினர்கள் சத்தம் எழுப்பினர்.
மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டால் மாநகராட்சி அதிகாரிகள் முறையாக தொலைபேசி அழைப்புகளை எடுப்பதில்லை. பலமுறை குற்றம்சாட்டியும் இதுவரை முறையாக நடந்து கொள்வதில்லை என்று குற்றம்சாட்டினார். மக்கள் பணிகளை மேற்கொள்ள தான் அதிகாரிகளிடம் கொடுத்தோம், எங்களுடைய பணிகளை கொடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் செல்போனில் அழைத்தால், செல்போன் அழைப்பை எடுத்து பேசுகிறார்கள். ஆனால் அதிகாரிகள் செல்போன் அழைப்பை எடுத்து பேசுவதில்லை என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் பேசுகையில், அமைச்சர் காந்தி அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறிய நிலையில் திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி அறிக்கையை விமர்சனம் செய்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதனை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, பொதுமக்கள் மீது வரி உயர்வை திணித்து உள்ளனர். திமுக கவுன்சிலர் ஓட்டு கேட்க போகமுடியவில்லை என்று கூறினார். அஜந்தாவை படித்துப் பார்க்க முடியவில்லை காலை ஏழு மணிக்கு கொடுக்கிறார்கள் எவ்வாறு படித்துப் பார்த்துவிட்டு கேள்வி எழுப்ப முடியும் என்று குற்றம்சாட்டினார். தகுதி இல்லாத ஒப்பந்ததாரர்கள் யார் என்று கூறியிருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் தற்பொழுது தகுதியானவர்கள் என்று டெண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துதான் நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் அவ்வாறு கொடுத்தால் தான் சேலம் மாநகராட்சி திருந்தும் என்றும் கூறினார்.
இதனிடையே சேலம் மாமன்ற சுயேட்சை கவுன்சிலர் பேசுகையில், 2 ஆண்டு காலமாக தண்ணீர் பிரச்சனை குறித்து மாநகராட்சி புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் திருவிளக்குகள் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தும். இதுவரை நடவடிக்கை இல்லை என்று சேலம் மாமன்ற உறுப்பினர் மூசா குற்றம்சாட்டினர். மக்கள் பிரதிநிதியாக மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பிரச்சினைகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.