மேலும் அறிய

‘கேரளா ஸ்டோரி 2’ சர்ச்சை... கோவையிலும் வெடித்த போராட்டம்...

‘கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு எதிர்ப்பு – திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் திரையிடப்பட்ட ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இயக்குநர் கமக்யா நாரயண் சிங் இயக்கத்தில், உல்கா குப்தா, அதிதி பாத்யா, ஐஸ்வர்யா ஓஜ்ஷா, சுமித் கல்வாத், அர்ஜன் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் தற்போது தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் திரையிடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான காட்சிகளை கொண்டுள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான சம்பவங்களை சித்தரித்துள்ளதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்கை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்

இந்நிலையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திரையரங்கை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி வணிக வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்றதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் ரஜபுநிஷா, இந்த திரைப்படம் குறித்து கேரள முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்றும், இந்தக் கதையில் கூறப்படும் சம்பவங்கள் உண்மையல்ல என்றும் பலரும் தெரிவித்துள்ளதாக கூறினார். ஆனால் இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காதது கவலைக்குரியது என அவர் விமர்சித்தார்.

மேலும், நடந்திருக்காத சம்பவங்களை வேண்டுமென்றே சித்தரித்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இஸ்லாமியர்களை கொடூரமானவர்களாக காட்ட முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் விமர்சித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget