TVK Vijay: த்ரிஷா சர்ச்சை.. ஒப்புக்கொள்கிறாரா விஜய்? - தவெக தொண்டர்கள் குழப்பம்!
விஜய் மனைவி சங்கீதா தெரிவித்ததாக சொல்லப்படும் மனுவில் எங்கேயும் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால் வெளியிடுவேன் என சொன்னார். ஆனால் பலரும் அது த்ரிஷா தான் என அடித்து கூறியிருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து பங்கேற்றது பெரும் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில் அவரை நம்பியிருக்கும் தவெகவினர் விழிபிதுங்கியுள்ளனர்.
சர்ச்சைக்கு தூபம் போட்ட சம்பவம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் காண்கிறார். இதற்காக மாவட்டந்தோறும் அவர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே கடந்த 6 மாத காலமாகவே விஜய் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த வாரம் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல்களும், அதுதொடர்பான மனு நகலும் வெளியானது.
இது முதலில் அதிர்ச்சி என்றால், அதில் சொல்லப்பட்ட விஷயம் பேரதிர்ச்சியாக அமைந்தது. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு உள்ளது. இதுதொடர்பாக கேட்டபோது எனக்கான உரிமைகளை முடக்கி மன ரீதியான டார்ச்சரை அனுபவித்தேன். மேலும் நடிகை பதிவிடும் புகைப்படங்களால் நான், மகன், மகள், குடும்பத்தினர் என அனைவரும் மன உளைச்சலில் உள்ளோம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இந்த சர்ச்சைக்கு தூபம் போடும் வண்ணம் விஜய் நேற்று ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் திருமண நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில் வந்து இறங்கினார். இருவரும் ஒரே கலரில் உடை அணிந்தும் வந்தனர். இதன் வீடியோ, புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பலரும் விஜயை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்தனர்.
தவெக தொண்டர்கள் இடையே குழப்பம்
இதனிடையே விவாகரத்து மனு வெளியானபோது அது முழுக்க போலி, விஜயின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் செய்த சதி, சங்கீதா அண்ணிக்கு அண்ணன் மேல என்னதான் கோபம் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் இப்படி செய்திருக்க கூடாது என தவெக தொண்டர்களும், ரசிகர்களும் குமுறினர். ஆனால் நேற்றைய நிகழ்வு என்னதான் இவர் சொல்ல வருகிறார் என தெரியாமல் சமாளிக்கவும் முடியாமல் திணறியுள்ளனர்.
ஒரு பக்கம் உங்களை ரொம்ப நம்புனோம் அண்ணா எனவும், மற்றொரு பக்கம் என் தலைவனுக்கு கெத்து அதிகம் தான் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். தனிப்பட்ட வாழ்க்கை வேறு, அரசியல் வாழ்க்கை வேறு.. என் தலைவன் அரசியலில் சாதிக்க பாடுபடுவோம் என மற்றொரு குரூப்பும் புறப்பட்டுள்ளது. நாலாபுறமும் இருந்து விஜய் ரசிகர்களையும், தவெக தொண்டர்களையும் விமர்சனங்களால் எதிர்த்தரப்பினர் தாக்கி வரும் நிலையில் விஜய் தரப்பால் அதனை எதிர்கொள்ள முடியாமல் முடங்கி போயுள்ளனர்.
விஜய் மனைவி சங்கீதா தெரிவித்ததாக சொல்லப்படும் மனுவில் எங்கேயும் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால் வெளியிடுவேன் என சொன்னார். ஆனால் பலரும் அது த்ரிஷா தான் என அடித்து கூறியிருந்தனர். இதனால் வெளிப்படையாகவே விஜய் உண்மையை ஒப்புக்கொள்கிறாரா அல்லது தவறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்படி நடந்துக் கொள்கிறாரா என்ற காரணம் புரியாமல் தவெகவின் தவித்துள்ளனர். அதேசமயம் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யுடன் தன்னை இணைத்து பேசியதற்காக நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். இதனால் பெருங்குழப்பம் நிலவி வருகிறது.
தேர்தல் நேரம் நெருங்கி விட்டது. இப்படியான நேரத்தில் வதந்திகளை உண்மையாக்கும் வகையில் விஜய் நடப்பது அவரது அரசியல் வாழ்க்கையை பாதிக்காதா.. இது அவருக்கு தெரியாதா எனவும் சரமாரியாக கேள்வி எழுகின்றது. எதுவாக இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் வாயை திறக்காத வகையில் வதந்தியோ, தகவலோ இவை அனைத்தும் உண்மையாகவே மக்கள் முன் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















