Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்றாலும் அவர் பதவியை ராஜினாமா செய்தாலும், முதலமைச்சராக தொடர்ந்து வருகிறார். மக்களவை தேர்தல் சமயத்தில் இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
இடைக்கால ஜாமின் முடிந்த நிலையில் ஜூன் 2ம் தேதி சரணடைந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவரை ஜாமினில் வெளியே விட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். பொய் வழக்குகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில் ஜாமின் கோரி, கெஜ்ரிவால் தரப்பு நீதிமன்றத்தை நாடிய நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 1 லட்சம் ரூபாய்க்கான ஜாமின் பத்திரம் அளித்துவிட்டு ஜெக்ரிவால் சிறையிலிருந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் நாளை ஜெக்ரிவால் சிறையில் இருந்து வருவார் என கூறப்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.