Tokyo Paralympics 2021: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் வெற்றி... அடுத்த சுற்றில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை!
உலக தரவரிசை பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் பவினா பென், அவரைவிட முன்னிலையில், 9 வது இடத்தில் இருக்கும் மேகனை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
டோக்கியோ பாரலிம்பிக் தொடரின் இரண்டாம் நாளான இன்று, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் பவினாபென் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், டேபிள் டென்னிஸில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கிரேட் பிரிட்டன் வீராங்கனை மேகனை எதிர்த்து போட்டியிட்ட அவர், 1-3 என்ற கேம் கணக்கில் போட்டியை வென்று அசத்தினார். உலக தரவரிசை பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் பவினா பென், அவரைவிட முன்னிலையில், 9 வது இடத்தில் இருக்கும் மேகனை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர்.
Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!
BHAVINABEN WINS
— IndiaSportsHub (@IndiaSportsHub) August 26, 2021
And we have our first victory at #Paralympics #Tokyo2020
Bhavinaben beats a slightly higher ranked opponent from GBR to qualify for next round #TableTennis GroupA Class4
Bhavinaben 🇮🇳 #12
11-7;9-11;17-15;13-11
Megan 🇬🇧 #9#Praise4Para #Ind pic.twitter.com/GD1bOM8BeZ
அந்த வகையில், பவினா படேல் (C4) க்ரூப்பில் விளையாடுபவர். நேற்று நடைபெற்ற போட்டியில், பவினாபென் சீனாவின் சோ யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே பின் தங்கிய நிலையில் இருந்தார் பவினா பென். போட்டி முடிவில் 3-11, 9-11, 2-11 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை இழந்தார்.
முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கின. இந்த தொடர் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முறை இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. அதிகபட்சமாக ஒரே பாராலிம்பிக் தொடரில் இந்தியா 4 பதக்கங்களை இரண்டு முறை வென்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. இம்முறை முதல் முறையாக பாரா பேட்மிண்டன் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக் தொடரைவிட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையிலான வீரர் வீராங்கனைகளை இந்தியா டோக்கியாவுக்கு அனுப்பியுள்ளது. இதனால், பதக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 8-12 பதக்கங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ind vs Eng, 2021: ரன் மெஷின் ரிப்பேரா...? சதம் அடிச்சு 2 வருஷமாச்சு! காலியானதா கோலி சரக்கு!