MI vs KKR IPL 2024: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்..பந்து வீச்சு தேர்வு; அதிரடி பேட்டிங்கை தொடங்குமா கொல்கத்தா?
MI Vs KKR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று (மே3) நடைபெற்று வரும் போட்டியில் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17- ல் இதுவரை 50 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அந்தவகையில் இன்று (மே 3) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 51 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியையும் 3 போட்டிகளில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், நடப்பு தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மிக எளிமையாக அமையும்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை 10 போட்டிகளில் விளையாடி வெறும் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் அந்த அணி தோல்வியே கண்டுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும், மும்பை அணி தோல்வியையே சந்தித்துள்ளது. மீதமுள்ள 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம்.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 232 ரன்களையும், குறைந்தபட்சமாக 67 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 210 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களால் விரும்பப்படும் மைதானங்களில் ஒன்றாகும். இந்த மேற்பரப்பில் ரன்கள் எளிதாகக் கிடைக்கும். இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் சூழல் பெரிதும் மாறுபடாது. பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மேலும் எளிதாக இருக்கும். எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சையே தேர்வு செய்துள்ளது. அந்தவகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இமாலய இலக்கை நிர்ணயிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்):
பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர் ), சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன் ), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்):
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா