ஜான்வி கபூர், ராம் சரண் நடிக்கும் ’Peddi’ திரைப்படம்!

Published by: ஜான்சி ராணி

ராம் சரண் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் ராம் சரண் நடித்திருந்தார்.

சிறந்த தெலுங்கு திரைப்படமாக தேசிய விருது பெற்ற ‘உப்பெனா’ படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் புதிய படத்தில் ராம் சரண் நடிக்கிறார்.

கன்னட சினிமா ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்,

ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திற்கு கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்

சுகுமார் ரைட்டிங்ஸ், Vriddhi சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு பெட்டி (Peddi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதல் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது,.

பெரும் பொருட்செலவில் உருவாகும் பெட்டி படம் அடுத்தாண்டு திரையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி படத்தில் ராம் சரண் வித்தியாசமான காதாபாத்திரத்தில் நடிக்கிறார்.