மேலும் அறிய

IPL 2023: ஐபிஎல் தொடங்கும் முன்பே பெரிய அடியை சந்தித்த சிஎஸ்கே.. முக்கிய வீரர் அவுட்.. என்ன ஆனது?

ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட கைல் ஜெமிசன் நான்கு மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். 

ஐபிஎல் 2023 தொடர் வருகின்ற மார்ச் 31 ம் தேதி கோலகலமாக தொடங்குகிறது. இந்த சீசனில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் மோது இந்த போட்டியானது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் ஆயுத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியான பிறகு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட கைல் ஜெமிசன் நான்கு மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். 

நான்கு மாதங்கள் ஓய்வு:

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜெமிசன் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த ஜீன் மாதம் முதல் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஜெமிசன், சிகிச்சை பெற்றபோதும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் எவ்வளவு காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் நியூசிலாந்து பயிற்சியாளர் கார் ஸ்டெட் தெரிவித்துள்ளார். கைல் ஜெமிசன் நியூசிலாந்துக்காக இதுவரை 16 டெஸ்டில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 

ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஜெமிசன்:

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் கைல் ஜெமிசன் ஒரு கோடி ரூபாய்க்கு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அவரது அடிப்படையில் ஒரு கோடி ரூபாய் என்ற நிலையில், அதே விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். முன்னதாக, கைல் ஜெமிசன் ஐபிஎல்-ல் விராட் கோலியின் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அங்கையும் அவரது செயல்திறன் சிறப்பாகவே இருந்தார். இன்னும் ஐபிஎல் தொடங்க ஒரு மாதமே உள்ள நிலையில் சிஎஸ்கே அணி கைல் ஜெமிசனுக்கு பதிலாக வேறு வீரரை அறிவிக்க வேண்டும். இது சிஎஸ்கே-க்கு சிரமத்தை அதிகரித்துள்ளது. கடந்த சீசனை பொறுத்தவரை பிளேஆஃப்களுக்குள் சென்னை அணி நுழையவில்லை. 

சிஎஸ்கே ஐபிஎல் 2023 அட்டவணை: 

  • போட்டி 1: மார்ச் 31, 2023 - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
  • போட்டி 2: ஏப்ரல் 3, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
  • போட்டி 3: ஏப்ரல் 8, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
  • போட்டி 4: ஏப்ரல் 12, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
  • போட்டி 5: ஏப்ரல் 17, 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
  •  போட்டி 6: ஏப்ரல் 21, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை (இரவு 7:30 மணி )
  • போட்டி 7: ஏப்ரல் 23, 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
  •  போட்டி 8: ஏப்ரல் 27, 2023 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி)
  •  போட்டி 9: ஏப்ரல் 30, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை (மதியம் 3:30 மணி)
  • போட்டி 10: மே 4, 2023 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ (மதியம் 3:30 மணி)
  • போட்டி 11: மே 6, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை (பிற்பகல் 3:30 மணி)
  • போட்டி 12: மே 10, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
  • போட்டி 13: மே 14, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
  •  போட்டி 14: மே 20, 2023: டெல்லி கேப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி (பிற்பகல் 3:30 மணி)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்எஸ் தோனி (கேப்டன்& விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷர் மத்ஷோவ், துஷர் மத்ஷோவ், துஷர் மத்கே தேஷ்பான் பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget