WPL 2024: போட்டிக்கு நடுவே ஸ்ரேயங்காவுக்கு காதல் ப்ரொபோஸ்.. சிரிப்பலையில் அதிர்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம்..!
ஸ்ரேயங்கா இதுவரை இந்திய அணிக்காக பெரியளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவர்தான்
மகளிர் பிரீமியர் லீக் 2024ன் நேற்று நடைபெற்ற 5வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது பார்வையாளர்கள் அமரும் இடத்தில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நடந்தது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
அப்படி என்ன நடந்தது..?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர் ஒருவர் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் இருந்தபடியே வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு காதலை தூது விட்டார். அதாவது, அந்த ஆர்சிபி ரசிகர் கையில் ஒரு பதாகையை வைத்திருந்தார். அதில், ”ஸ்ரேயங்கா என்னை திருமணம் செய்து கொள்கிறாயா..?” என எழுதப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ரசிகரின் கையில் இருந்த இந்த போஸ்டரை பார்த்து பலரும் சிரித்தனர். இது போன்ற காட்சிகள் பலமுறை பல ஸ்டேடியத்தில் கண்டதுண்டு. விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் இதுபோன்ற பல காதல் ப்ரொபோஸ்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Marriage proposal for Shreyanka Patil and RCB’s players laughing in the dressing room. pic.twitter.com/yoY4e5zfxK
— CricketMAN2 (@ImTanujSingh) February 27, 2024
யார் இந்த ஸ்ரேயங்கா..?
ஸ்ரேயங்கா இதுவரை இந்திய அணிக்காக பெரியளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவர்தான். இவரை இன்னும் பலரும் தங்களது க்ரஷாக சுற்றி வருகின்றன. ஸ்ரேயங்கா இந்திய அணிக்காக இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 6 டி20 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டி20யில் 19 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியதே இவரது சிறந்த பந்துவீச்சாகும்.
நேற்றைய போட்டி சுருக்கம்:
மகளிர் பிரீமியர் லீக் இன் ஐந்தாவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹேம்லதா ஆட்டமிழக்காமல் 31 ரன்களை எடுத்திருந்தார். ஆர்சிபி சார்பில் பந்துவீச்சில் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளையும், மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குஜராத் கொடுத்த இலக்கை விரட்டிய ஆர்சிபி 12.3 ஓவரில் இலக்கை எட்டியது. ஸ்மிருதி மந்தனா 27 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க, மறுமுனையில் மேக்னா ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார்.
முதல் இடத்தில் ஆர்சிபி:
குஜாராத் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை பெற்று ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது. இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. இந்த பட்டியலில் குஜராத் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி 2லிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆர்சிபி அணி தனது முதல் போட்டியில் உபி வாரியர்ஸை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில், நேற்று குஜராத்தை வீழ்த்தியது. இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் அணிகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை அணிக்கு எதிராக டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.