Rain: 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெயிலானது, சமீப நாட்களில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், வடக்கு உள் கர்நாடகா முதல் தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை:
தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய வானிலை:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-03-2025 மற்றும் 26-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
27-03-2025 மற்றும் 28-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22-03-2025 மற்றும் 23-03-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 22, 2025
சென்னை வானிலை :
இன்று (22-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இந்நிலையில், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு:
கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், ஏனைய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. பதிவான மழை அளவானது ( செ.மீ அளவில் ), தூத்துக்குடி ரயில் நிலையம் ARG (தூத்துக்குடி) 8, திற்பரப்பு (கன்னியாகுமரி) 4, வால்பாறை PAP (கோயம்புத்தூர்). வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி) தலா 3, சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 2 செ.மீ அள்வும் பெய்துள்ளது.
மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), சின்கோனா (கோயம்புத்தூர்). ராதாபுரம் (இருநெல்வேலி), நம்பியாறு அணை (திருநெல்வேலி), நாங்குனேரி (திருநெல்வேலி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), தூத்துக்குடி விமான நிலையம் ARG (தூத்துக்குடி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) தலா 1 அளவு பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை:
வெப்பநிலை நிலவரத்தை பொறுத்தவரையில், ஈரோட்டில் 38.0° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தி: 21.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஓட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் இயல்பை விட 28 செல்சியஸ் அதிகமாகவும், ஒரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் குறைவாகவும், வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 36 டிகிரி செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 35 டிகிரி செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

