CSK Vs MI IPL 2025: சென்னையில் கோலோச்சும் மும்பை, ஹர்திக் படையை தாக்கு பிடிப்பாரா கெய்க்வாட்..! ஐபிஎல் ஆண்ட பரம்பரைகள்
CSK Vs MI Head to Head IPL 2025: ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

CSK Vs MI Head to Head IPL 2025: ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில், மும்பை அணி தொடர்ந்து கோலோச்சி வருகிறது.
ஐபிஎல் 2025 திருவிழா - மும்பை Vs சென்னை
ஐபிஎல் எனும் கோடைகால கிரிக்கெட் திருவிழா வரும் 22ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றாலும், பெரும்பான்மையான ரசிகர்களின் பார்வை என்பது, மும்பை மற்றும் சென்னை அணிகளின் மீத் தான் உள்ளது. நடந்து முடிந்துள்ள 17 தொடர்களில்,10 முறை இந்த அணிகள் தான் தலா 5 முறை கோப்பைகளை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக மும்பை அணி சென்னைக்கு எதிராக மட்டுமே இறுதிப்போட்டியில் வென்று மூன்று முறை கைப்பற்றியுள்ளது. இதனால் இரு அணிகளும் ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளாக திகழ்கின்றன. இந்நிலையில், நடப்பு தொடர் தொடங்குவற்கு முன்பாக, இரு அணிகளிடையேயான கடந்த கால வரலாறு குறித்து இங்கே அறியலாம்.
ஆதிக்கம் செலுத்தும் மும்பை
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள், இதுவரை 37 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 17 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மும்பையின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்றுள்ள 12 போட்டிகளில், சென்னை அணி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெற்றுள்ள 8 போட்டிகளில் மும்பை அணி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதிப்போடிட்யில் இரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ளன. அதில் சென்னை அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பிளே-ஆஃப் சுற்றுகளில் மும்பையை எதிர்கொண்ட 5 போட்டிகளில், சென்னை அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது.
CSK Vs MI - மைதானத்தில் ரன்மழை:
ஒரே தொடரில் அதிகமுறை நேருக்கு நேர் மோதிகொண்ட அணிகள் என்ற பெருமையும் இந்த அணிகளுக்கே சேரும். 2013, 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தலா 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிகளில் ரன்மழைக்கு பஞ்சமிருக்காது. அதேநேரம், லோ ஸ்கோரிங் போட்டிகளில் பரபரப்பிற்கும் பஞ்சமிருக்காது. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றின் சிறந்த போட்டியாளர்களாக இந்த அணிகள் திகழ்கின்றன.
- மும்பைக்கு எதிராக சென்னையின் அதிகபட்ச ஸ்கோர் - 218
- சென்னைக்கு எதிராக மும்பையின் அதிகபட்ச ஸ்கோர் - 219
- மும்பைக்கு எதிராக சென்னையின் குறைந்தபட்ச ஸ்கோர் - 79
- சென்னைக்கு எதிராக மும்பையின் குறைந்தபட்ச ஸ்கோர் - 136
- ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி - 60 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி (5-5-2013)
- விக்கெட்ஸ் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி - 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி (23-10-2020)
- அதிகபட்ச தொடர் வெற்றிகள் - 2018 தொடங்கி 2019 வரை தொடர்ந்து 5 போட்டிகளில் மும்பை வெற்றி
- அதிக ரன்கள் - ரோகித் சர்மா (837 ரன்கள்)
- அதிக விக்கெட்டுகள் - மலிங்கா, பிராவோ (தலா 37 விக்கெட்டுகள்)
ஆதிக்கத்தை தொடருமா சென்னை?
ஒட்டுமொத்தமாக மும்பை அணி ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை வரும் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியிலும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், 2023ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை அணியை வீழ்த்தவில்லை என்ற மோசமான பயணத்தை முடிவுக்கு கொண்டு வர மும்பை அணியும் தீவிரம்காட்டி வருகிறது. முதல் போட்டியில் மட்டும் மும்பை அணிக்கு, சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்க உள்ளார்.
உத்தேச பிளேயிங் லெவன்:
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, சிவம் துபே, தீபக் ஹூடா, சாம் குர்ரன், எம்எஸ் தோனி (வி.கே), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா
மும்பை: ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (வி.கே), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், கரண் சர்மா, தீபக் சாஹர், டிரென்ட் போல்ட்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

