"நாய்களா.. கழுத்தை நெரிச்சுடுவேன்" போராட்டம் நடத்திய பெண்.. பகிரங்கமாக மிரட்டிய பாஜக தலைவர்
சாலையை திறந்து வைப்பதற்காக வந்த முன்னாள் பாஜக எம்பியை, பெண்கள் இடைமறித்து, எம்பியாக இருக்கும்போது ஏன் இங்கு வரவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு, கழுத்தை நெரித்துவிடுவேன் என முன்னாள் பாஜக எம்.பி. பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் புதிய சாலையை திறந்து வைப்பதற்காக வந்த முன்னாள் பாஜக எம்பியை, பெண்கள் இடைமறித்து, எம்பியாக இருக்கும்போது ஏன் இங்கு வரவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு, கழுத்தை நெரித்துவிடுவேன் என முன்னாள் பாஜக எம்.பி. பகிரங்கமாக மிரட்டியுள்ளார். பெண்களை பாஜக எம்.பி. மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்களை மிரட்டிய பாஜக தலைவர்:
மேற்குவங்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பலமான இடதுசாரிகளை மூன்றாம் இடத்திற்கு தள்ளி தற்போது பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் திலீப் கோஷ். இவர், மேற்குவங்க பாஜக தலைவராக இருந்தபோதுதான், பாஜக குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை "கழுத்தை நெரித்து கொன்றுவிடுவேன்" என மிரட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் திலீப் கோஷ். நேற்று, புதிதாக கட்டப்பட்ட சாலையைத் திறக்கச் சென்றபோது, உள்ளூர் பெண்களால் திலீப் கோஷ் சூழப்பட்டார்.
எங்க அப்பாவை ஏன் இழுக்குறீங்க?
அப்போது, திலீப் கோஷை நோக்கி கேள்வி எழுப்பிய பெண்கள், "இவ்வளவு நாள் நீங்க எங்க இருந்தீங்க? நீங்க எம்.பி.யா இருந்தப்போ ஒரு நாள் கூட நாங்க உங்களைப் பார்த்ததே இல்ல. இப்போ, நம்ம கவுன்சிலர் (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதீப் சர்க்கார்) சாலையைக் கட்டிய பிறகு, நீங்க இங்க இருக்கீங்க" என்றனர்.
ছিঃ! একজন মহিলাকে বিজেপি নেতা দিলীপ ঘোষ কিভাবে হুমকি দিচ্ছে, শুনে নিন! বিজেপির থেকে এর বেশি আর কিই বা আশা করা যায়? ধিক্কার বিজেপিকে!#ShameOnBJP #DilipGhosh #bjpwestbangal pic.twitter.com/JdGL4guhJc
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) March 21, 2025
இதற்கு கோபமாக பதில் அளித்த திலீப் கோஷ், "நான் அதை உன் அப்பாவோட பணத்துல கட்டல. என் பணத்துல கட்டினேன். பிரதீப் சர்க்காரிடம் போய் இதைப் பத்தி கேளு" என்றார். கோபத்தில் கொந்தளித்த மற்றொரு பெண், "எங்க அப்பாவை ஏன் இழுக்குறீங்க? நீங்க ஒரு எம்.பி., இப்படிப் பேசலாமா?" என்றார்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற திலீப் கோஷ், "உன்னுடைய பதினான்கு தலைமுறைகளை பற்றியும் பேசுவேன். கத்தாதே. உன் கழுத்தை நெரித்துவிடுவேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எனது எம்.பி. நிதியிலிருந்து இதற்கான பணம் கொடுத்தேன். நீங்க திரிணாமுல் நாய்கள்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

