Video: நண்பருடன் நெருக்கமாக நடாஷா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.. இது உண்மையா?
ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறபப்டுகிறது.
ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்து குறித்த செய்திகள் நாளுக்குநாள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறபப்டுகிறது. இதன் காரணமாக இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.
இதற்கு அச்சாரமாக ஹர்திக்கும் நடாஷாவும் நீண்ட நாட்களாக தங்களது சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்து இருக்கும்படியான புகைப்படஙக்ளை பதிவிடவே இல்லை. இப்படியாக சூழ்நிலைக்கு மத்தியில்தான், ஹர்திக் பாண்டியாவின் மனைவி வேறு ஒருவரை முத்தமிடுவது போன்ற வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
கேள்வி கேட்கும் ரசிகர்கள்:
இந்த வீடியோவை பார்த்த ஹர்திக் பாண்டியாவில் ரசிகர்கள் நடாஷா தனது கணவர் ஹர்திக் பாண்டியாவை ஏமாற்றி வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். விவாகரத்து செய்தி குறித்து நடாஷா மற்றும் ஹர்திக் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
நடாஷா வேறொரு நபருக்கு முத்தம் அளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. அந்த வீடியோவில், நடாஷா ஒருவரை முத்தமிடுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனினும், இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதேபோல், இது உண்மையில் நடாஷாவா என்பதும் தெரியவில்லை. ஒரு சிலர் கமெண்ட் பக்கத்தில் இது நடாஷாவே கிடையாது. ஏதோ வதந்திக்காக ஒரு நபரின் வீடியோவை இணையத்தில் பரப்பி வருகின்றனர் என்று பதிவிட்டு வருகின்றன.
ஹர்திக் தனது 70% சொத்தினை நடாஷாவிற்கு கொடுக்க வேண்டுமா..?
ஹர்திக் உடனான விவாகரத்துக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா தனது சொத்தில் இருந்து 70 சதவீத சொத்துகளை நடாஷா கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
हार्दिक के तलाक लेने की खबर से
— Paridhi Singh (@Paridhi023) May 27, 2024
लड़को को ये सीख लेनी
चाहिए..🙂
कि प्रॉपर्टी हमेशा मां के
नाम पर लेनी चाहिए
और
लोन हमेशा पत्नी के
नाम पर...😝😂🤣#HardikPandya
#NatasaStankovic pic.twitter.com/MXik9MTswT
இந்திய அணியின் துணைக் கேப்டன்:
2024ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சமீபத்தில் கடந்த ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பார்ம் அவுட்டில் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஐபிஎல் லீக் சுற்றுடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது. அதன் பிறகு ஓய்வுக்காக லண்டன் சென்ற ஹர்திக் பாண்டியா, லண்டனில் இருந்து நேரடியாக 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றடைந்தார். வருகின்ற ஜூன் 1ம் தேதி இந்திய அணி நியூயார்க்கில் வங்கதேசத்திற்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.