![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ranji Trophy 2024: தமிழ்நாடு - பஞ்சாப் மோதும் ரஞ்சி கோப்பை போட்டிக்கு அனுமதி இலவசம்; சேலத்தில் ரசிகர்கள் உற்சாகம்
Tamil Nadu vs Punjab Ranji Trophy: 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி 19 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
![Ranji Trophy 2024: தமிழ்நாடு - பஞ்சாப் மோதும் ரஞ்சி கோப்பை போட்டிக்கு அனுமதி இலவசம்; சேலத்தில் ரசிகர்கள் உற்சாகம் Ranji Trophy 2024 Tamil Nadu vs Punjab Happy News for Cricket Fans Free Entry Salem Cricket Foundation Stadium TNN Ranji Trophy 2024: தமிழ்நாடு - பஞ்சாப் மோதும் ரஞ்சி கோப்பை போட்டிக்கு அனுமதி இலவசம்; சேலத்தில் ரசிகர்கள் உற்சாகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/14/2df171090a7f5b7e51f47e13c9e98a201707915383849113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஞ்சி கோப்பை (Ranji Trophy) கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் நடந்து வரும் நிலையில் கடைசியில் போட்டிகள் வரும் 16 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது (Tamil Nadu vs Punjab). இப்போட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமைந்துள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் (Salem Cricket Foundation Stadium) நடைபெறுகிறது. வரும் 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் தலைமையில் களம் காண்கிறது.
இதுவரை நடந்த லீக் போட்டியின் முடிவில் சீ பிரிவில் தமிழ்நாடு 22 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடைசியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கர்நாடகாவுடன் மோதிய தமிழ்நாடு அணி டிரா செய்தது. இதனால் கர்நாடகா அணி 24 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்திற்கு நேற்று தமிழ்நாடு அணி வந்து சேர்ந்தது. இன்று காலை 9 மணி முதல் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் அணி இன்று வந்தடைகிறது. 16 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் நாட்களில் காலை 9 மணி முதல் பார்வையாளர்களை இலவசமாக அனுமதிக்க உள்ளனர். இதற்கு முன்பாக சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைபெற்ற வந்த நிலையில் தற்போது சேலம் கிரிக்கெட் மைதானத்தில் ரஞ்சி கோப்பை போட்டி நடைபெற உள்ளதால் சேலத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)