Salem Flight Update: சேலம் மக்கள் இனிமேல் தினமும் பறக்கலாம்... வெளியானது விமான நிறுவனத்தின் மாஸ் அப்டேட்.
Salem Airport : மார்ச் 30ஆம் தேதி முதல் கோடை கால திட்ட பயணப்படி வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவை இயக்கப்படும் என அலையன்ஸ் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூ ஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சின் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை இயங்கி வருகிறது.
அலையன்ஸ் ஏர் நிறுவனம்:
இதில், அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் குளிர் காலத் திட்டத்தில், சேலம் விமான நிலையத்திலிருந்து செவ்வாய் சனி தவிர்த்து பிற நாட்களில் கொச்சின் - சேலம் - பெங்களூரு மீண்டும் பெங்களூரு - சேலம் - கொச்சின் என வாரம் ஐந்து நாட்களுக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திருவான்மியூர் டு உத்தண்டி இனி 10 நிமிஷம் தான்.. ECR-யை மாற்ற போகும் 16Km உயர்மட்ட பாலம்..
தினசரி விமான சேவை:
இந்த நிலையில் வரும் மார்ச் 30ஆம் தேதி முதல் கோடை கால திட்ட பயணப்படி வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவை இயக்கப்படும் என அலையன்ஸ் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ஆம் தேதி முதல், மதியம் 12:10 மணிக்கு கொச்சினில் இருந்து புறப்படும் விமானம், மதியம் 1: 20 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடையும். சேலம் விமான நிலையத்திலிருந்து மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு, ரெண்டு 45 மணிக்கு பெங்களூருவை அடையும். பின்னர், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மதியம் 3:20 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 4:20 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடையும். மீண்டும் சேலம் விமான நிலையத்திலிருந்து மதியம் 4:45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 5:50 மணிக்கு கொச்சின் விமான நிலையம் சென்றடையும் என அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையம் விரிவாக்க பணி:
சேலம் விமான நிலையம் 165 ஏக்கர் பரப்பில் 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது சென்னை, பெங்களூர், கொச்சின், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினசரி விமான போக்குவரத்து நடக்கிறது. இந்த நிலையில், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக 4 கிராமங்களில் இருந்து 575 ஏக்கர் நிலத்தை எடுக்க அளவீடு பணிகள் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: SETC Bus Timings: கிளாம்பாக்கம் போக வேண்டாம்.. விரைவு பஸ்களில் இனிமேல் தென் மாவட்டத்துக்கு ஈசியா போகலாம்.. முழு விவரம்
புதிய ஓடு பாதைகள்:
சேலம் காமலாபுரம் விமான நிலையம் தற்போது பகல் நேரங்களில் மட்டுமே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்து தரையிறங்குவதற்கான வசதிகளுடன் கூடிய விமான ஓடு பாதை சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி புதிதாக நான்கு விமானங்கள் நிறுத்தும் இடமும். கூடுதல் விமான ஓடு பாதையில் அவைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
2026ல் புதிய விமான நிலையம்:
சேலம் விமான நிலையம் விரிவாக்க பணிகள் 75% முடிந்துள்ளது. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால் 2026 தொடக்கத்தில் பணிகள் நிறைவு பெற்று புது பொலிவுடன் சேலம் விமான நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் இந்தியாவில் உள்ள பெரு நகரங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை தொடங்கப்படலாம் எனவும், இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சேலத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

