Watch video: ஒற்றை கையால் கேட்ச்.. கெத்துகாட்டிய சஞ்சு.... ஜிம்பாவேக்கு எட்டுத்திக்கும் பயம் காட்டும் இந்திய பெளலர்கள்!
கைடானோ விக்கெட்டை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் லாபகமாக தாவி பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று ஜிம்பாவே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முதல் போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
A look at our Playing XI 👇
— BCCI (@BCCI) August 20, 2022
One change for #TeamIndia. Shardul Thakur comes in place of Deepak Chahar.
Live - https://t.co/6G5iy3rRFu #ZIMvIND pic.twitter.com/JAmJ6HxmGu
இந்நிலையில், ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் விக்கெட்டை சிராஜ் தனது 9 வது ஓவரில் கைப்பற்றினார். தொடக்க வீரராக களமிறங்கிய தகுட்ஸ்வானாஷே கைடானோ தொடக்கம் முதலே இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வர, இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிராஜ் தான் வீசிய 9 வது ஓவரில் இன் ஸ்விங்காக வீசினார். அதை எதிர்கொண்ட தகுட்ஸ்வானாஷே கைடானோ அடிக்க முயன்று அவுட் சைடு எட்ஜாக மாறியது.
What a take Sanju Samson ,such an underrated wicketkeeper he is ,can always surprise us with some acrobatic moves 🔥🥵 #INDvsZIM #SanjuSamson pic.twitter.com/p4UeQkFFkP
— Anurag 🇮🇳 (@RightGaps) August 20, 2022
தொடர்ந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் லாபகமாக தாவி பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
One handed catch from Sanju Samson. #INDvsZIM pic.twitter.com/ILfly28AiJ
— Just Butter (@ItzButter63) August 20, 2022
இதன் தொடர்ச்சியாக ஜிம்பாவே அணி அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்து வருகின்றனர். தற்போது ஜிம்பாவே அணி 21 வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியான இந்திய வெற்றிகள்:
13* vs ஜிம்பாவே (2013-22)
12 vs பங்களாதேஷ் (1988-04)
11 vs நியூசிலாந்து (1986-88)
10 vs ஜிம்பாவே (2002-05)
இந்திய அணி ஏற்கெனவே ஜிம்பாவே அணிக்கு எதிராக 2002-05 ஆண்டில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது 13 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது.