Markram Century: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்... மளமளவென சதம் அடித்த ஐடன் மார்க்ரம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வீரர் ஐடன் மார்க்ரம் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.
ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களில் சுருண்டது. அதனபடி,
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்கா அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
சிராஜ் மட்டும் இல்லாமல், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸின் முதல் ஷெஷனில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் கெய்ல் வெர்ரைன் 15 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் பெடிங்கம் 12 ரன்களும் சேர்த்தார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மொத்தம் 4 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
சதம் விளாசிய மார்க்ரம்:
பின்னர், களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் இன்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்க அணி வீரர் ஐடன் மார்க்ரம் சிறப்பாக விளையாடினார். அதன்படி, 103 பந்துகள் களத்தில் நின்ற அவர் 17 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் என மொத்தம் 106 ரன்களை குவித்தார்.