ICC 2021 Review: ”மறக்க முடியாத கிரிக்கெட் தருணங்கள்” - உணர்ச்சி பொங்க ஐசிசி பகிர்ந்த பதிவு
2021 ம் ஆண்டு கிரிக்கெட்டில் ரிஷப் பந்தின் புகழ்பெற்ற கபா இன்னிங்ஸ் முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாதனை படைத்த மிதாலி ராஜ் வரை சில சிறந்த தருணங்களை கீழே பார்க்கலாம்.
2021 ம் ஆண்டு கிரிக்கெட்டின் சில சிறந்த தருணங்களை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 2021 ம் ஆண்டு கிரிக்கெட்டில் ரிஷப் பந்தின் புகழ்பெற்ற கபா இன்னிங்ஸ் முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாதனை படைத்த மிதாலி ராஜ் வரை சில சிறந்த தருணங்களை கீழே பார்க்கலாம்.
நியூசிலாந்து - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது
2019 ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை மிகக் குறைவான வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தவறவிட்டது. இந்த தோல்விக்கு பிறகு, கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி இந்திய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா- முதல் ஐசிசி டி20 உலக கோப்பையை வென்றது
மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்காளதேசத்துடனான T20I தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பலர் ஆஸ்திரேலியா அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர். இந்த தோல்விகளில் இருந்து மீண்டெழுந்த ஆஸ்திரேலியா அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் டி 20 உலக கோப்பை வென்றது.
அஜாஸ் பட்டேலின் 10 விக்கெட்டுகள்:
நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடரின் இரண்டாவது டெஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோருடன் பட்டேல் இணைந்தார்.
நமிபியா - ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான முதல் சுற்று ஆட்டத்தில், அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தது நமீபியா அணி. இதன் மூலம், முதல் முறையாக டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. க்ரூப்:2-ல் இடம் பிடித்திருந்ந்த நமீபியா அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறியது. எனினும், நமீபியா அணிக்கு இதுவே ஆரம்பம்! நல்லதொரு ஆரம்பம்!
மிதாலி ராஜ் - மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீராங்கனையானார்
MILESTONE🚨: @M_Raj03 has now completed 𝟐𝟎𝟎𝟎𝟎 career runs.🙌🏾🙌🏾👏🏾 #Legend pic.twitter.com/tkY9zWmNYF
— BCCI Women (@BCCIWomen) September 21, 2021
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் முக்கியமான வீராங்கனைகளில் ஒருவரான இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டினார்.
ஸ்நே ரானாவின் அதிரடியால் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி
இங்கிலாந்து மகளிருக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய மகளிர் அணி,போராடி போட்டியை வெல்ல முக்கிய காரணம் ஸ்நே ராணா.
டி20 உலகக்கோப்பையில் முகமது ரிஸ்வான்
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அதிரடியாக தொடங்கி அரை இறுதி போட்டியில் ஏமாற்றத்தை தந்தது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த முகமது ரிஸ்வான், பேட்டிங்கில் அசத்தினார். கடந்த ஆண்டு மட்டும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1326 ரன்கள் எடுத்திருக்கிறார். ரிஸ்வானின் அதிரடி பேட்டிங் கிரிக்கெட் வட்டாரத்தை கவனிக்க வைத்தது.
காபாவில் பண்ட் மேஜிக்
காபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பண்ட் அடித்த 89* ரன்கள் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. இந்த போட்டியை வென்றது மூலம், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இந்தியா சாதனைப் படைத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்