Womens Ashes 2023: அனைத்திலும் முதலிடம்.. ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. இங்கிலாந்து எதிராக அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான பிரிட்ஜ் டெஸ்டில் ஆஸ்திரேலியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான பிரிட்ஜ் டெஸ்டில் ஆஸ்திரேலியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெண்கள் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 2023 பெண்கள் மகளிர் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 1-0 முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய பெண்கள் அணி அனைத்து வடிவங்களிலும் முதலிடத்தில் உள்ளது.
அலிசா ஹீலியின் அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வென்றது. அதனை தொடர்ந்து, டி20 உலகக் கோப்பையையும் வென்று அசத்தியது.
அசத்தும் ஆஸ்திரேலிய அணி:
கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு 2022 இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்தது. இதில், முதல் முறையாக பெண்கள் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இறுதிப்போட்டியில் ஹர்மன்பீரித் கவுர் தலைமையிலான இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. மேலும், அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி 2023 ஆம் ஆண்டு மகளிர் ஆஷஸ் தொடரை இங்கிலாந்தை வீழ்த்தி முதல் போட்டியில் வெற்றி கண்டுள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலிய பெண்கள் அணிதான் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் பலம் வாய்ந்த அணி என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஜூன் 22 ம் தேதி தொடங்கிய டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்டில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 473 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக சுதர்லேண்ட் 137 ரன்களும், எல்லீஸ் பெர்ரி 99 ரன்களும் எடுத்திருந்தனர்.
அடுத்ததாக முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 463 ரன்கள் குவித்தது. பியூமண்ட் 208 ரன்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் 78 ரன்களும் எடுத்திருந்தனர்.
மீண்டும் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 257 ரன்கள் அடித்து, இங்கிலாந்து அணிக்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஷ்லே கார்ட்னர் 66 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தினார். தவிர கிம் கார்த் மற்றும் தஹிலா மெக்ராத் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இங்கிலாந்து தரப்பில் இரண்டாவது இன்னிங்சில் டேனியல் வியாட் 88 பந்துகளில் 54 ரன்கள் அடித்திருந்தார்.
ஆஸ்திரேலிய பெண்கள் அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வடிவத்திலும் தற்போது முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.