Rafael Nadal: 17 ஆண்டுகள்.. 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்.. மீண்டும் ஃபீனிக்ஸாய் திரும்பிவந்த ரஃபேல் நடால்!
2022 ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் ரஷ்யாவைச் சேர்ந்த மெட்வதேவ் ஆகிய இருவரும் மோதினர். இறுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியை 2-6,6-7,6-4,6-4,7-5 என்ற கணக்கில் ரஃபேல் நடால் வென்று அசத்தினார். அத்துடன் தன்னுடைய 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இதன்மூலம் ஆடவர் டென்னிஸ் பிரிவில் 21 கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2005ஆம் ஆண்டு ரஃபேல் நடால் முதல் முறையாக தன்னுடைய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 17 ஆண்டுகளுக்கு பிறகு 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
நான்கு கிராண்ட்ஸ்லாம்- 3 வீரர்கள் ஆதிக்கம்:
டென்னிஸ் உலகில் ரோஜர் ஃபெடரர்,ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் இந்த மூன்று பேர் ஆதிக்கம் செலுத்திய அளவிற்கு வேறு யாரும் செய்ததில்லை. 40 வயதாகும் ரோஜர் ஃபெடரர் தான் இவர்களில் மூத்தவர். இவர் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று தன்னுடைய 20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அடுத்து உள்ள ரஃபேல் நடால் தன்னுடைய 34ஆவது வயதில் 2020 பிரஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று தன்னுடைய 20 கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றார். இந்த வரிசையில் மூன்றாவதாக உள்ள நோவக் ஜோகோவிச் தன்னுடைய 34ஆவது வயதில் 2021 விம்பிள்டன் பட்டம் வென்று தன்னுடைய 20ஆவது கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றார். இவர்களில் யார் 21ஆவது கிராண்ட்ஸ்லாம் தொடரை
கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் | ரோஜர் ஃபெடரர் | ரஃபேல் நடால் | நோவக் ஜோகோவிச் |
ஆஸ்திரேலியன் ஓபன் | 6 | 2 | 9 |
பிரஞ்சு ஓபன் | 1 | 13 | 2 |
விம்பிள்டன் | 8 | 2 | 6 |
யு எஸ் ஓபன் | 5 | 4 | 3 |
2003ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக வென்று ஃபெடரர் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். 2005ஆம் ஆண்டு ரஃபேல் நடால் பிரஞ்சு ஓப்பன் பட்டத்தை வென்று தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
Legendary status 💪#AusOpen • #AO2022 pic.twitter.com/7uDDds3x7z
— #AusOpen (@AustralianOpen) January 30, 2022