மேலும் அறிய

ஹேப்பி நியூஸ் மக்களே ! விரைவில் புதிய ரேஷன் கார்டு... அமைச்சர் அதிரடி அறிவிப்பு

புதிய ரேஷன் கார்டுகள் வாங்குவதற்கு 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து விரைவில் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன்

புதிய ரேஷன் கார்டுகள் வாங்குவதற்கு 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்த கார்டுகளும் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

3,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் புதிதாகத் திறப்பு

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் 3,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சட்டப் பேரவையின் கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு இந்த பதில் கொடுக்கப்பட்டுள்ளது. பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துணை கிராமங்களில் ரேஷன் கடைகள் இல்லாததால் 2 கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய சூழல் இருப்பதாக அவர்தெரிவித்தார்.

கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கீழ் பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துணை கிராமங்களில் ரேஷன் கடைகள் இல்லாத காரணத்தால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க 2 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் தமிழகம் முழுவதும் துணை கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு முன்வரவேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 3000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. துணை சபாநாயகர் பிச்சாண்டியின் கோரிக்கையும் பரிசீலக்கப்படும் என தெரிவித்தார்.

ரேஷன் கடை தொடர்பான மற்றொரு அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 34,902 ரேஷன் கடைகளில் 6,218 ரேஷன் கடைகள் தனியார் மற்றும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

புதிய ரேஷன் கார்டுகள் குறித்து பேசுகையில்,

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 18,000க்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் மொத்தமாக 2.25 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மேலும், 51,327 ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய ரேஷன் கார்டுகள் வாங்குவதற்கு 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்த கார்டுகளும் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார்.

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Embed widget