Palani Kumbabishekam: பழனி கோவில் கும்பாபிஷேக விழா: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்; மாலை வேள்விச்சாலை நிகழ்ச்சிகள்
Palani Kumbabishekam Online Booking: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மங்கல இசையுடன் கும்பாபிஷேக வேள்விச்சாலை நிகழ்ச்சிகள் இன்று மாலை தொடக்கம்.
அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மங்கல இசையுடன் கும்பாபிஷேக வேள்விச்சாலை நிகழ்ச்சிகள் இன்று மாலை துவங்குகிறது. முன்னதாக பழனி மலைக்கோவில் கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோபுரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டு கோவில் கோபுரங்கள் பதுமைகள் ஆகியவை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை நன்மங்கள இசை மற்றும் விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேகத்திற்கான வேள்விச் சாலை நிகழ்ச்சிகள் இன்று துவங்குகிறது.
எட்டுக்கால வேள்விகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவில் சுற்றுப்புறகாரத்தில் உள்ள கோவில்கள் கோபுரங்கள் சுற்றுச்சூழல் பெருமைகள் ஆகியவை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று காலை தங்க விமானம், ராஜகோபுரம், வடக்கு தெற்கு கோபுரங்கள், விமானங்கள், மலைக்கோவில் உள் திருச்சுற்று கோவில்கள் உள்ளிட்ட 50 கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு நவதானியங்கள், நவரத்தினங்கள் ஆகியவற்றுடன் கோபுரங்களில் பொறுத்தும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதற்கான இணையதள பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. வருகிற விருப்பமுள்ள பக்தர்கள் http://www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் http://www.hrce.tn.gov.in ஆகிய வலைதளங்களில் இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்களில் இரண்டாயிரம் பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டிய ஆவணம்.
1. நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை (PAN CARD)
2. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
3. பாஸ்போர்ட் (Passport)
4. நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு (Bank Pass Book)
5. ஓட்டுநர் உரிமம் (Driving License)
6. குடும்ப அட்டை(Ration Card)
7. தேசிய அடையாள அட்டை (Aadhaar Card) சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து
தங்களது கைப்பேசி எண்ணுடன் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail Id) விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்