மேலும் அறிய
PV Sindhu : மீண்டும்..மீண்டுமா..? ஜப்பான் ஓபனிலும் தோல்வி அடைந்த பி.வி.சிந்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்!
PV Sindhu Japan Open : டோக்கியோ நகரில் நடைபெற்று வந்த ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் தோல்வியை தழுவி உள்ளார் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.

பி.வி.சிந்து
1/6

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று (25.07.2023) டோக்கியோவில் தொடங்கி உள்ளது. 26 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இத்தொடர், இன்று (ஜூலை 25) தொடங்கி ஜூலை 30 வரை நடைப்பெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், எச்.அஸ்.பிரணாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2/6

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் தைவானை சேர்ந்த சௌ தியென்-சென் மோதிய ஆட்டத்தில் 21-13, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அடுத்ததாக ப்ரணாய் சீனாவை சேர்ந்த லி ஷிஃபெங்கை 21-17, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று 16 ஆவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெற உள்ள 16ஆவது சுற்றில் இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த் மற்றும் ப்ரணாய் மோதவுள்ளனர்.
3/6

இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் சுற்றின் 32ஆவது சுற்றில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து மற்றும் சினாவை சேர்ந்த ஜாங் யிமானும் எதிர்கொண்டனர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜாங் யிமான் 21-12, 21-13 என்ற நேர்செட்களில் சிந்துவை வெற்றி கொண்டார்.
4/6

இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான பி.வி.சிந்து கடந்த ஒரு வருட காலமாகவே பட்டம் எதுவும் வெல்லவில்லை. இதனால் இவர் தரவரிசை பட்டியலில் 17 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டார்.
5/6

இந்தியாவின் ஸ்டார் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து இந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசிய ஓபன், அமெரிக்க ஓபன், கொரியன் ஓபன் என அனைத்து தொடர்களிலும் தோல்வி அடைந்திருந்த நிலையில் தற்போது ஜப்பான் ஓபனிலும் தோல்வி அடைந்து வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
6/6

சிந்து சமீபத்தில் மலேசியாவின் முகமது ஹபீஸ் ஹாஷிமை தனது பயிற்சியாளராக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 26 Jul 2023 01:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கோவை
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion