பாலிவுட்க்கு டாடா சொன்ன பிரியங்கா சோப்ரா..மும்பையில் இருந்த 4 வீடுகளை விற்று ஜூட்
நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு சொந்தமாக மும்பையில் இருந்த 4 அடுக்குமாடி குயியிருப்புகளை விற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

லாஸ் எஞ்சலஸ் குடிபெயர்ந்த பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டின் உச்சபட்ச நடிகராக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா . கடந்த 2018 ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் மற்றும் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையில் 10 வருட வித்தியாசம் இருந்தது பெரும் பேசு பொருளானது. ஆனால் எப்போதும் போல தனது ஸ்டைலில் விமர்சனங்களை அசால்ட்டாக கையாண்டார் பிரியங்கா சோப்ரா. இந்த தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் முடிந்த கையோடு தனது கணவரோடு லாஸ் எஞ்சலில் குடி பெயர்ந்தார் பிரியங்கா சோப்ரா.
வீட்டை விற்ற பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ராவின் மொத்த சொத்து மதிப்பு 80 மில்லியன் டாலர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு சொந்தமாக மும்பையில் பல வீடுகள் இருந்தது. அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பின் தனது சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்க தொடங்கினார். 2021 ஆம் ஆண்டு மும்பை அந்தேரியில் இருந்த இரண்டு வீடுகளை 7 கோடிக்கு விற்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி வீடுகளை 6 கோடிக்கு விற்றார். இதனைத் தொடர்ந்து . இதற்கு பதிலாக மும்பை மற்றும் புனேவில் அலுவலகத்திற்காக மட்டும் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்தார்
தற்போது மும்பையில் தனக்கு சொந்தமான 4 அடுக்குமாடி குடியிருப்புகளை விற்றுள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்த நான்கு வீடுகளின் மொத்த ட மதிப்பு 16.17 கோடி ஆகும். கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள இருப்பதாக கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். தற்போது தனக்கு சொந்தமான சொத்துக்களை மொத்தமும் விற்றுவிட்டு இந்தியாவைவிட்டே ஜூட் விட்டுள்ளார்.
ராஜமெளலி படத்தில் பிரியங்கா சோப்ரா
தற்போது பிரியங்கா சோப்ரா எஸ்.எஸ் ராஹமெளலி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மகேஷ் பாபு இதில் நாயகனாக நடிக்கிறார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 1000 கோடி பட்ஜெட்டில் சாகசக்கதையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக பிரியங்கா சோப்ரா 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

