மேலும் அறிய

Mushfiqur Rahim: போதும்பா..! 20 வருட பயணம், ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் - இந்தியர்களால் மறக்க முடியுமா?

Mushfiqur Rahim: வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Mushfiqur Rahim: முஷ்பிகுர் ரஹீம் சுமார் 20 ஆண்டுகளாக வங்கதேச அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஓய்வை அறிவித்த முஷ்பிகுர் ரஹீம்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக, வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனது சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். அதில், ” சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன். உலக அளவில் நமது சாதனைகள் குறைவானது தான் என்றாலும், ஒன்று நிச்சயம்: நான் என் நாட்டிற்காக களத்தில் இறங்கும்போதெல்லாம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையை 100% க்கும் அதிகமாகக் கொடுத்தேன். கடந்த சில வாரங்கள் எனக்கு மிகவும் சவாலனதாக இருந்தது. இதுதான் எனது முடிவு என்பதை நான் உணர்ந்தேன். குரானில் சொல்லப்பட்டு இருப்பது போல, யாரை கவுரவிக்க வேண்டுமோ அவரை இறைவன் கவுரவிப்பார். 19 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். 

சாம்பியன்ஸ் ட்ராபியில் அவுட்:

அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் வங்கதேச அணி களமிறங்கியது. ஆனால், ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் அந்த அணி போட்டியிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் தான் அந்த அணியின் மூத்த வீரரான ரஹிம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். முஷ்பிகுர் 2005 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் வங்கதேச அணி சார்பில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அவரது முதல் போட்டியின்போது, ரஹீமின் வயது வெறும் 18 ஆண்டுகள் மற்றும் 17 நாட்களே ஆகும்.  தொடர்ந்து அடுத்த ஓராண்டு இடைவெளியிலேயே அதாவது 2006ம் ஆண்டிலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் களம்கண்டார். தற்போது அவருக்கு வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: IND Vs NZ Final 2025: பொளந்து கட்டுமா இந்தியா? பொட்டலம் கட்டுமா நியூசிலாந்து? ரோகித் Vs சாண்ட்னர் - ஃபைனல் ஆபத்துகள்

இந்தியாவிற்கு எதிரான இன்னிங்ஸ்

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக ஓராண்டே ஆன நிலையில், 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். 56 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, இந்தியாவை வீழ்த்த வங்கதேச அணியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம், அந்த போட்டியிலிருந்தே இந்திய அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அந்த தோல்வியை இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

கேப்டனாகவும் அசத்தல்:

முஷ்பிகுர் ஒருநாள் போட்டிகளில் பல ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.  மேலும் தனது அணியை கேப்டனாகவும் வழிநடத்தியுள்ளார். அவர் தனது 274 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒன்பது சதங்கள் மற்றும் 49 அரைசதங்களுடன் 7795 ஒருநாள் ரன்களை எடுத்துள்ளார். 37 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 11 வெற்றிகளையும் பெற்று தந்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget