மேலும் அறிய
ITT Vs BT: திரும்பி எழ முடியாத அளவுக்கு திருச்சி அணியை விளாசிய திருப்பூர்!
டேரில் ஃபெராரியோ, ஜாபர் ஜமால் ஆகியோர் பொறுமையாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டாலும் அவர்களால் வெற்றி பாதையை நோக்கி செல்ல முடியவில்லை.

வெற்றி பெற்ற திருப்பூர் தமிழன்ஸ்
1/6

7 வது சீசன் டி.என்.பி.எல் போட்டியின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது.நேற்று 7:15 மணிக்கு நடந்த போட்டியில் திருச்சி அணியை எதிர்கொண்டது திருப்பூர் .இந்த போட்டியில் திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
2/6

தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சாய் கிஷோர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராதாகிருஷ்ணனுடன் கைகோர்த்து சிறப்பாக ஆட ஆரம்பித்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தால் ரன்கள் குவிய தொடங்கின. இவர்களின் பார்ட்னர்ஷிப் கிட்டதட்ட 90 ரன்களை கடந்தது. சாய் கிஷோர் 4 சிக்சர் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
3/6

பின்னர் களமிறங்கிய அனிருத் அதிரடியாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்தார். அனிருத் 25 பந்துகளில் ஒரு சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் அடித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது திருப்பூர்.
4/6

பின்னர் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய திருச்சி அணிக்கு ஆரம்பமே மோசமாக அமைந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய என்ன செய்வதன்று அறியாமல் தவித்தது திருச்சி அணி.
5/6

டேரில் ஃபெராரியோ, ஜாபர் ஜமால் ஆகியோர் பொறுமையாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டாலும் அவர்களால் வெற்றி பாதையை நோக்கி செல்ல முடியவில்லை. ஜாபர் ஜமால் 30 ரன்களும் டேரில் ஃபெராரியோ 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
6/6

20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது திருச்சி. திருப்பூர் அணியின் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் தல 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.இதன் மூலம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது திரூப்பூர்.
Published at : 26 Jun 2023 12:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement