மேலும் அறிய
ஒரு ஆண்டில் இத்தனை சிக்ஸர்களா? சாதனைகளை அடுக்கி வரும் இந்திய அணி!
ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி 215 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

ஐசிசி அணிகள்
1/6

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்களை அடித்த அணியின் பட்டியலை காண்போம்.
2/6

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி 215 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்த சிக்சர் கணக்கு 2023 ஆம் ஆண்டில் அடிக்கப்பட்ட சிக்ஸர்களாகும்.
3/6

இந்தப் பட்டியலில் 209 சிக்ஸர்களுடன் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த சிக்ஸர்களின் கணக்கு 2019 ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட சிக்ஸர்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தகுதி பெறாதது குறிப்பிடத்தக்கது.
4/6

203 சிக்ஸர்களுடன் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த சிக்ஸர்களின் பட்டியல் 2023 ஆம் ஆண்டில் அடிக்கப்பட்ட சிக்ஸர்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
5/6

179 சிக்ஸர்களுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சிக்ஸர்களின் கணக்கு 2015 ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட சிக்சர்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு உலக கோப்பை தொடரில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த இந்திய அணியுடன் மோதுகிறது.
6/6

165 சிக்ஸர்களுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கணக்கு 2023 ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட சிக்கல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவை வரும் நவம்பர் 16 அன்று எதிர்கொள்கிறது.
Published at : 15 Nov 2023 09:57 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement