Vijay Speech: "ஸ்டாலின் அங்கிள் வெரி வொர்ஸ்ட் அங்கிள்".. 2026ல் திமுக - தவெக தான் போட்டி!
தவெக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார்.

மதுரையில் நடைபெறும் 2ஆவது தவெக மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் அனல் பறக்கும் பேச்சால் தொண்டர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளையும் விமர்சித்து பேசியுள்ளார். அதேபோன்று அதிமுகவை பாஜகவின் அடிமை கட்சி என்றும் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், நான் கட்சி தொடங்க போவதாக செய்திகள் வெளியானது. அவர் வர மாட்டார், அவர் தொடங்க மாட்டார் என தெரிவித்தார்கள். கட்சி தொடங்கிய பிறகு விஜய் அரசியலுக்கு தெரியாது. அவர் எதை பேசப் போகிறார் என்றும் விமர்சித்தார்கள் என தெரிவித்தார்.
பின்பு பேசிய விஜய், ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர். அதற்கு பலரும் எடுத்துக்காட்டாகவும் கூறினர். விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாகாது என்றனர். இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் வரும். நான் ஒன்றும் மார்க்கெட் போன பின் அடைக்கலம் தேடி, அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்தோடு வந்திருக்கிறேன் என தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார்.
அதன் பின்பு திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதில், வெற்று விளம்பர மாடல் திமுக பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது. ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுறாங்க. ஸ்டாலின் அங்கிள் வெரி ராங்க் அங்கிள். கூட்டணி வைக்கலாம். கூட்டணி வச்சு தப்பிச்சிக்கலாம் என்று திமுக நினைக்கிறது, அது நடக்காது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அண்ணா பல்கலைக்கழக பிரச்னை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கதறிட்டு இருக்காங்க. உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா! சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள் என கடுமையாக விமர்சித்து விஜய் கிண்டல் செய்தார்.





















