TVK Maanadu Madurai LIVE: தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக 2-வது மாநில மாநாடு - நேரலையில் காணுங்கள்
TVK Maanadu Madurai LIVE: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு, மதுரை பாரபத்தியில் தொண்டர்கள் வெள்ளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை நேரலையில் காணுங்கள்...

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு தொடங்கி, அரசியலில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில், பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்புடன் வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மதுரை அருகே பாரபத்தியில் 506 ஏக்கர் நிலத்தில் மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு, கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், மதுரையில் உள்ள பாரபத்தியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கும் பல லட்சம் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மாநாட்டை நேரலையில் காணுங்கள்....





















