மேலும் அறிய
Emmanuel Macron Modi : பிரான்ஸ் அதிபரை ராஜஸ்தானில் வரவேற்ற இந்திய பிரதமர் மோடி!
Emmanuel Macron Modi : நடப்பாண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் பங்கேற்றுள்ளார்.

இம்மானுவேல் மேக்ரான் - நரேந்திர மோடி
1/6

நடப்பாண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் பங்கேற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
2/6

இதற்காக, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நேற்று இந்தியா வந்தடைந்தார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்ட அவர் நேரடியாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூருக்கு நேற்று பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தார்.
3/6

ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட அதிபர் மேக்ரான் அங்கு நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி, உள்ளூர் கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்த்து வியந்தார்.
4/6

பழங்கால இந்தியர்களின் வானிலை ஆய்வகத்தை மேக்ரான் பார்வையிட்டார். ஐந்தர் மந்தரில் இருந்து சங்கநேரி கேட் வரை மேக்ரானும், பிரதமர் மோடியும் காரில் ஊர்வலமாக சென்றனர்.
5/6

யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான ஹவா மஹாலின் முன் அதிபர் மேக்ரானும் பிரதமர் மோடியும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
6/6

ஜெய்ப்பூரில் புகழ்பெற்ற சாஹு டீ கடையில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் இம்மானுவேல் மேக்ரானும் டீ அருந்தினர்.
Published at : 26 Jan 2024 12:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement