NIRF Rankings 2025: NIRF தரவரிசை: தமிழ்நாட்டின் 14 டாப் பொறியியல் கல்லூரிகள்! உங்கள் கனவு காலேஜ் இருக்கா?
இந்த ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் டாப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக் கல்லூரிகள் பிடித்துள்ள இடங்கள்:

NIRF தரவரிசைப் பட்டியலில் பொறியியல் பிரிவில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகள் எவை? இதோ பட்டியல்!
அகில இந்திய அளவில் சிறந்து விளங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பட்டியலை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) என்ற பெயரில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தப் பட்டியல் வெளியாகி வரும் நிலையில் இந்த ஆண்டு பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட 16 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தலைசிறந்து விளங்கும் கல்லூரிகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் டாப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக் கல்லூரிகள் பிடித்துள்ள இடங்கள்:
எந்த கல்லூரிகள், பெற்ற மதிப்பெண்கள், பிடித்த இடம்
- ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை - 88.72 – 1ஆம் இடம்
- ஐஐடி திருச்சி - 68.14 - 9 ஆம் இடம்
- S.R.M. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை- 65.83- 14 ஆம் இடம்
- விஐடி (வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்) வேலூர் -16 ஆம் இடம்
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 63.51- 20 ஆம் இடம்
- அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர்- 62.46 - 23 ஆம் இடம்
- கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி, கிருஷ்ணன் கோயில் - 59.03 -33 ஆம் இடம்
- சாஸ்த்ரா (சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் & ஆராய்ச்சி அகாடமி), தஞ்சாவூர் - 58.02 - 40 ஆம் இடம்
- சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை -56.55 - 45 ஆம் இடம்
- எஸ்எஸ்என் (ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி) காளவாக்கம், 56.08 - 47 ஆம் இடம்
- PSG தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் -50.64 - 67 ஆம் இடம்
- சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை - 50.64- 67 ஆம் இடம்
- வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை- 47.43 - 87 ஆம் இடம்
- ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் -45.55- 100 ஆம் இடம்






















