Hyundai Creta EV: 510 கி.மீட்டர் மைலேஜ்.. ஹுண்டாய் கிரெட்டா ஈவி காரில் இத்தனை வேரியண்ட்களா? விலை பட்டியல் இதான்!
ஹுண்டாய் நிறுவனத்தின் மின்சார காரின் வேரியண்ட்கள் என்னென்ன? அதன் விலை என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக ஹுண்டாய் உள்ளது. தற்போது அனைத்து முன்னணி நிறுவனங்களும் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. இவி கார்களும் சந்தையில் நன்றாக விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் ஹுண்டாய் நிறுவனத்தின் மின்சார கார்களும் சந்தையில் சக்கைப் போடு போட்டு வருகிறது.
Hyundai Creta Electric கார்:
ஹுண்டாய் நிறுவனத்தின் அசத்தலான தயாரிப்பாக இருப்பது கிரெட்டா. ஹுண்டாய் கிரெட்டாவில் மின்சார கார்களும் தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த Hyundai Creta Electric கார் 42 கிலோ வாட் பேட்டரியிலும், 51.4 கிலோவாட் பேட்டரியிலும் உள்ளது. 42 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 420 கி.மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. 51.4 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 510 கி.மீட்டர் ஆற்றல் கொண்டது ஆகும்.

வேரியண்ட்களும், விலையும்:
Hyundai Creta Electric கார் எந்த மாடல் என்ன பேட்டரி திறன்? என்ன விலை என்பதை கீழே காணலாம்.
1. Executive - 42 கிலோ வாட் - ரூபாய் 18 லட்சத்து 2 ஆயிரத்து 200
2. Executive Tech - 42 கிலோ வாட் - ரூ. 18 லட்சத்து 99 ஆயிரத்து 900
3. Premium - 42 கிலோ வாட் - ரூ.19 லட்சத்து 99 ஆயிரத்து 900
4. Premium (HC) - 42 கிலோ வாட் - ரூ.20 லட்சத்து 72 ஆயிரத்து 900
5. Excellence - 42 கிலோ வாட் - ரூ.21 லட்சத்து 29 ஆயிரத்து 900
6. Excellence (HC) - 42 கிலோவாட் - ரூ.22 லட்சத்து 02 ஆயிரத்து 900
7. Executive (O) - 51.4 கிலோவாட் - ரூ.19 லட்சத்து 99 ஆயிரத்து 900
8. Smart (O) - 51. 4 கிலோவாட் - ரூ. 21 லட்சத்து 53 ஆயிரத்து 100
9. Smart (O) (HC) - 51.4 கிலோவாட் - ரூ. 22 லட்சத்து 26 ஆயிரத்து 100
10. Excellence - 51.4 கிலோவாட் - ரூ.23 லட்சத்து 66 ஆயிரத்து 600
11. Excellence (HC) - 51.4 கிலோவாட் - ரூ.24 லட்சத்து 39 ஆயிரத்து 600
510 கி.மீட்டர் மைலேஜ்:
இதில் 51. 4 கிலோ வாட் பேட்டரி கொண்ட அதாவது 510 கி.மீட்டர் மைலேஜ் தரும் வேரியண்ட்கள் 5 உள்ளது. மொத்தம் உள்ள 11 வேரியண்ட்களில் மீதமுள்ள 6 வேரியண்ட்கள் 42 கிலோவாட் பேட்டரி கொண்ட வேரியண்ட்கள் ஆகும்.
இந்த ஹுண்டாய் எலக்ட்ரிக் மின்சார காரின் தொடக்க விலை ரூபாய் 18.02 லட்சம் ஆகும். இது எக்ஸ் ஷோ ரூம் விலை ஆகும். 510 கி.மீட்டர் மைலேஜ் தரும் 51.4 கிலோ வாட் பேட்டரி பொருத்திய ஹுண்டாய் கிரெட்டா Executive (O) காரின் தொடக்க விலை ரூபாய் 19.99 லட்சம் ஆகும். அதிகபட்சமாக Excellence (HC) வேரியண்ட் ரூபாய் 24.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்கள்:

42 கிலோ வாட் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 4 மணி நேரமும், 51.4 கிலோவாட் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 5 மணி நேரமும் ஆகும். டிஸ்க் ப்ரேக் வசதி கொண்டது ஆகும். இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக், மழை பெய்தால் வைபர் தானாக வேலை செய்வது போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும், உபகரணங்களும் உள்ளது.
இந்த காரில் 5 பேர் வரை பயணிக்கலாம். நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு இந்த கார் அசத்தலான படைப்பாக உள்ளது. டேஷ்போர்டிலும் கூகுள் மேப், ப்ளைண்ட் ஸ்பாட் வியூவ், பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இதில் உள்ளது. செல்போனை இணைத்துக் கொள்ளும் அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சமும் இதில் உள்ளது.
ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு என்று தனி மவுசு உண்டு. சாதாரண பட்ஜெட் கார் முதல் அதிநவீன சொகுசு கார்கள் வரை ஏராளமான கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். பெட்ரோலில் ஓடும் கிரெட்டா காரின் விற்பனையும் இந்தியாவில் சக்கைப் போடு போட்டு வருகிறது.





















